அச்சடிச்ச காகிதம் அழி ரப்பருக்கு வணங்காது, ஆமாம்…

0

ஒரு நிறுவனத்திற்கு இருக்கிற கம்பீரம், ஒண்ணாந் தேதியானால் டாண் என்று சம்பளத்தை கொடுத்துவிடுவதுதான். ஆனால் சீரியல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தாலும், சம்பள விஷயத்தில் ‘நை’ என்றே இருக்கிறதாம் சேனல். அதனால் சரவணன் மீனாட்சி தம்பதிகளுக்கு செமத்தியான அர்ச்சனை விழுந்து கொண்டிருக்கிறதாம் தொழிலாளர்கள் மத்தியில்.

சைக்கிள் பஞ்சரானால் கூட, ரயில் தடம் புரண்ட ரேஞ்சுக்கு அதை பிரமாண்டப்படுத்தி விடுவார்கள் இங்கே. இது வயிற்றுப் பிரச்சனையாச்சே, விடுவார்களா? தீக்குளிக்கிற ரேஞ்சுக்கு போய்விட்டார்களாம் தொழிலாளர்களில் சிலர்.

யாராவது இதை மீடியாவுல எழுதினா, சம்பந்தப்பட்டவங்களுக்கு அசிங்கமா படும். சம்பளமும் மொத்தமா வந்துரும் என்று முட்டுசந்தில் நின்று கொண்டு குய்யோ முறையோவென புலம்பும் தொழிலாளர்கள் ரிப்போர்ட்டர், ஜு.வி ரேஞ்சுக்கு பிரச்சனையை இழுத்துவிட்டு விடுவார்கள் போலிருக்கிறது. அய்யா பெரியவங்களே, சொல்றதை சொல்லிட்டோம். அப்புறம் மீனாட்சியே வந்து கொஞ்சினாலும் அச்சடிச்ச காகிதம் அழி ரப்பருக்கு வணங்காது, ஆமாம்…

Leave A Reply

Your email address will not be published.