அது ஊதாவா, புளூவா? -சிவகார்த்திகேயனை மிரள வைத்த ‘கலர்’ பிரச்சனை

0

‘ஊதா கலரு ரிப்பன், யாரு உன் அப்பன்’ என்ற பாடல் யுனிவர்சல் ஹிட்டாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. (கொஞ்சம் ஓவரா புகழ்ந்தாச்சோ, இருக்கட்டும்…) சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவை பார்த்து பாடும் இந்த பாடலில் காட்டப்படுவது ஊதா கலர் ரிப்பன்தானா என்கிற அதிமுக்கியமான விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக்கில்.

அது ஊதாவே இல்ல. ஃபுளு. இதை கூடவா கவனிக்கக் கூடாது என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டால், பாட்டு எடுக்கும்போதே எனக்கும் அந்த டவுட் வந்துச்சு. ஆனால் புளூவைதான் நம்ம ஊர்ல ஊதான்னு சொல்லுவோம் என்றார்களாம் அப்போது. ‘ஒருவழியாக சமாதானம் ஆகிதான் நடிச்சேன். ஆனால் அது இவ்வளவு பெரிய கருத்துப்புரட்சியை ஏற்படுத்தும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலே பாஸ்’ என்றார் பரிதாபமாக.

‘வேல வெட்டி இல்லேன்னா கருப்பட்டிக்கு கூட கலர் அடிப்பாங்க நம்ம ஊர்ல. விடுங்க பாஸ்’ என்ற பிறகுதான் நிம்மதியே வந்தது அவரது முகத்தில்.

Leave A Reply

Your email address will not be published.