” ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா “

0

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும்  T. சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா” என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடிக்கிறார். இன்னொரு  ஒரு நாயகியாக அஸ்வினி நடிக்கிறார். ஸ்ரீரக்ஷா சில மலையாளப் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். முக்கியவேடத்தில் ரஞ்சித் நடிக்கிறார் வில்லனாக சாகர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

மற்றும் தலைவாசல் விஜய், வனிதா, பாலாசிங், நான்கடவுள் ராஜேந்திரன் மயில்சாமி விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவசநாராயண மூர்த்தி,சிசர்மனோகர், இந்திரன், அம்பிகாமோகன், எம்.ஆர்.கோபகுமார், நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : அய்யப்பன்.N

இசை : சுமன்பிச்சு

பாடல்கள் : ஏகாதசி / கலைஸ்ரீனி

எடிட்டிங் : சாஜன்

நடனம் : சாந்தகுமார் / ஸ்டன்ட் –  ரன்ரவி

தயாரிப்பு நிர்வாகம் : ஸ்ரீகுமார்

வசனம் : பொன். பிரகாஷ்

கதை : வினோத்லால்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்  – சந்தோஷ் கோபால்

தயாரிப்பு : உல்லாஸ் கிளி கொல்லூர்,  T. சுரேஷ்.

படம் பற்றி இலக்குனரிடம் கேட்டோம்.

வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் கதாநாயகன் சஞ்சீவ்முரளி  ஊரில் தாதாவாகத் திரியும் வில்லனுடன் நட்பு பாராட்ட நினைக்கிறார். அதனால் தனக்கு மிகப் பெரிய அந்தஸ்து ஏற்படும் என்று நினைத்து வில்லனுடன் பழகுகிறார்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போன்று கதாநாயகனின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.  இதை கமர்ஷியலாக நாகர்கோவில்,கன்யாகுமரி,கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.