நடிகை சாக்ஷி அகர்வால் துவங்கி வைத்த ஆடை அணிவகுப்பு

0
தமிழர்களின் பாரம்பரியத்தை உலகெங்கும் நிலைநாட்டும் விஷயங்களில்  குடும்ப அமைப்பு, தயாள குணம் ஆகியவற்றோடு தனித்தன்மை மிக்க புடவைக்கு என்றுமே தனியிடம் உண்டு. இவ்வளவு சிறப்புமிக்க புடவைகளின் சிகரமாக விளங்குவது பட்டுப் புடவைகள்.
அந்த பட்டுப் புடவைகளின்  பாரம்பரியத்தை உணர்ந்து நவீன தொழில்நுட்பங்களுடன், இன்றைய தலைமுறை இளம்பெண்களுக்கு ஏற்றவகையில் புதியரக பட்டுப் புடவைகளை  அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகிறது ஸ்ரீ பாலம் சில்க்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீபாலம் சில்க், பெங்களூர் பெண்களின் தேவையை கருத்தில் கொண்டு இங்கும் தனது சேவையை விரிவுபடுத்தி உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 23/10/13 அன்று பெங்களுரில் உள்ள ஸ்ரீபாலம் சில்க் நிறுவனத்தில் வண்ணமிகு ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.
பிரபல நடிகை ஷாக்சி அகர்வால் இந்த அணிவகுப்பை துவக்கி வைத்தார். ஸ்ரீபாலம் சில்க் நிறுவனத்தில் உருவான வண்ணமிகு புடவைகளை அணிந்தபடி மேடையில் மங்கைகள் ஒயிலாக நடைபோட்டனர். இந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் 4 புதுரக பட்டுப்புடவைகளை ஸ்ரீ பாலம் சில்க் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்ரீ பாலம் சில்க் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவி, ட்யோ டோன் சில்க், நியான் சில்க், சிவப்பு கம்பள வரவேற்பு புடவைகள், மிளிரும் வண்ணத்தில், அன்னப் பறவையின் துகில் போன்று எடை குறைவான அல்ட்ரா லைட் புடவைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.
தங்க கிரீடத்தில் வைரம் பதித்தது போன்று ஸ்ரீ பாலம் சில்க் குழுமத்தின் புதிய வரவாக வந்து புதுப்புது டிசைன்களில் பட்டுப் புடவைகளை உருவாக்கி, நீண்ட நெடிய பட்டுப் பாரம்பரியத்தின் நவீன வாரிசாக திகழ்கிறார் ஜெயஸ்ரீ ரவியின் மகள் சுனிதா ரவி.
தீபாவளிக்காக இவர் கைவண்ணத்தில் உருவாகி உள்ள பட்டுப் புடவைகள் குறித்து பேசிய சுனிதா ரவி, புடவையின் இரண்டு முனைகளில் இரண்டு வெவ்வேறு பார்டர்களைக் கொண்ட டுயோ டோன் பட்டுப் புடவைகள் பார்த்தவுடன் கண்ணைப் பறிக்கும் நியான் ரக பட்டுப்புடவைகள் இன்றைய இளம் தலைமுறையின் கட்டாயத் தேர்வாக இருக்கும் என்று கூறுகிறார் அவர்.
ஸ்ரீபாலம் சில்க் குழுமத்தில் சுனிதாவின் வரவு புதிய மெருகை கூட்டியுள்ளது. இதற்கு அச்சாரமாக அவர் சிந்தனையில் உருவான இரண்டு வெவ்வேறு துணிரகங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்பு புடவைகளும் சுனிதாவின் கைவண்ணமே.
வழக்கமாக புதுப்புது புடவைகளை சென்னையில் அறிமுகப்படுத்தும் ஸ்ரீ பாலம் சில்க், இந்த தீபாவளிக்கு பெங்களூரில் தங்களது புதிய ரக புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏனெனில் பண்டிகை காலங்களில் புதுரக புடவைகளை நாடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு பெங்களூர் வாசிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.
அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பெங்களூரிலேயே நவீனரக பட்டுப் புடவைகளை வாங்குவதற்கு ஏதுவாக இந்த நான்கு ரக புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது ஸ்ரீ பாலம் சில்க். அதேசமயம் வாங்குவதற்கு ஏற்ற விலையில் இருக்கும் என்பதே பாலம் சில்க்கின் தனிச்சிறப்பு என்கிறார் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவி.
பெங்களூர் ஜெயநகரின் 9-வது ஏ பிரதான சாலையின் 5-வது ப்ளாக்கில் அமைந்துள்ளது பட்டுப் புடவைகளின் ஆலயமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ பாலம் சில்க். கூடுதல் விவரங்களுக்கு   www.palamsilk.com என்ற இணையதளத்தில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.