விஜய்க்கு DD வேந்தருக்கு குஷ்பு

0
வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி, நேயர்களிடையே அருமையான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரம்மாண்டமான, அழகுமிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் குஷ்பு தோன்றுவது இதுதான் முதல்முறை,
இன்று திரையில் பிரபலமாக இருக்கும் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள், மனந்திறந்து குஷ்புவுடன் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், ‘படம் பேசும்’, ‘கலாட்டா கெட்-அப்’, ‘வேந்தர் ஷாப்பிங்’ போன்ற சுவையான பகுதிகளும் இதில் இடம்பெறுகின்றன.
‘படம் பேசும்’ பகுதியில், பிரபலங்களின் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.  அந்த புகைப்படங்களைப் பற்றிய சுவையான நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்து கொள்வர். ‘கலாட்டா கெட்-அப்’ பகுதியில், பிரபலங்கள் தேர்வு செய்யும் தோற்றம், அவர்களுக்கு மேக்கப்பாக போடப்படும். ‘வேந்தர் ஷாப்பிங்’ பகுதியில், பிரபலங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.
ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, அன்று மாலையே 6.30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

Leave A Reply

Your email address will not be published.