விரைவில் அனைவருக்கும் ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது

0

மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “திகில்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக செரீன் நடிக்கிறார். மற்றும் கல்கிஸ்ருதி, ரவிகாளே, விஜய்ஆனந்த், ஜெயஸ்ரீராஜ், அரவிந்த்  ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாடல்கள்   –  அண்ணாமலை

ஒளிப்பதிவு     –     நந்தாகிஷோர், ஹசீப், என்.முரளிதர்

இசை   –   ஆஸ்லிமண்டோனிகா

எடிட்டிங்   –  வினோத் மனோகர்

நடனம்   –   திரிபுவன்

தயாரிப்பு மேற்பார்வை   –  ஆனந்த் சங்கர்

எழுதி இயக்கி இருப்பவர் –  சந்தோஷ் கொடன்கேரி.

தயாரிப்பு    –   மிராக்கிள் மூவி மேக்கர்ஸ்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

இந்த படம் ஒரு இரவில் நடக்கும் ஹாரர் திரிலர் படம். தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் செரீனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. திடிரென்று சிலநாட்கள் அவருக்கு விடுமுறை கிடைக்க எட்டுமாதம் கழித்து திருமணம் நிச்சயிக்க பட்டவரை பார்க்க அவரிடம் சொல்லாமல் செல்ல முடிவு செய்கிறார்.

சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள  கூர்க் என்ற இடத்தை  வந்தடைகிறார். கூர்க்  மலை பிரதேசம் என்பதால் இரவு பயணத்தை தவிற்பதற்காக  வாடகை வீடு ஒன்றில் தங்குகிறார். அங்கு அவருக்கு எல்லா வசதிகளும் கிடைகின்றன.

அந்த வீட்டில் ஒரு இடத்தில் துப்பாக்கி மற்றும் பழைய கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். விடிவதற்கு முன்பு அவர் சந்திக்கும் திகில் அனுபவங்கள் தான் படத்தின் திரைக்கதை. இந்த படத்திற்காக ஒரே இடத்தில் இருபது நாட்கள் இரவு மட்டுமே படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருகிறது.விரைவில் அனைவருக்கும் ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது என்றார் இயக்குனர் சந்தோஷ் கொடன்கேரி.

Leave A Reply

Your email address will not be published.