கவுண்டர் போனார், தேவர் போனார், நாடார் போனார்… இப்போ கோணார்? -சினிமாவில் ஜாதி வெறி?

பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட்  –  புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைத்து வழங்க கழுகு வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு”

ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோணார் என்ற வேடமேற்று இருக்கிறார்.  நாயகனாக நவீன்சந்திரா நடிக்கிறார்.கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா,செல்வா,போஸ்வெங்கட்,.வெங்கடேஷ்,அல்வாவாசு, பூ ராம், சோனா  ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு           மது அம்பாட்

இசை                   என்.ஆர். ரகுநந்தன்

எடிட்டிங்              மு. காசி விஸ்வநாதன்

ஸ்டன்ட்               விஸ்வரூபம்  டி. ரமேஷ்

 நடனம்                தினா

கலை                   தேவா

பாடல்கள்            சினேகன்

தயாரிப்பு மேற்பார்வை       –     டி.ஆர். வாசுதேவன், பி.பாண்டியன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  சத்யசிவா.

தயாரிப்பு  –  முக்தா ஆர்.கோவிந்த், புன்னகைப் பூ கீதா.

படம் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்…..

இது இலங்கை தமிழர் பற்றிய படம். ஆனால் இலங்கையில் எந்த வித படப்பிடிப்பும் நடத்தப் பட வில்லை. இங்கேயே தான் படப்பிடிப்பை நடத்தினோம். இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கி குடியுரிமைக்காக  ஏங்குகிறவர்களின்  வாழ்க்கை பதிவு தான் சிவப்பு. இங்கிருந்து ஆஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தப்பிப்போக நினைத்து, முடியாதவர்களின் மன வலி, காதலையும் உள்ளடக்கிய கதை. பாதுகாப்புத் தர வேண்டிய சமூகம் அவர்களை பந்தாட நினைக்க, பாதுகாப்பு அரணாக ராஜ்கிரண் கோனார் என்கிற கம்பீர வேடமேற்கிறார். இதில் அழகிய காதல் இருக்கு !  அடித்தட்டு மக்களின் வலியும் இருக்கு. படம் பார்க்கிற ஒவ்வொரு மனிதனின் மனதை ஒரு நிமிடம் உலுக்கி விடும் படமே சிவப்பு. இந்தப் படத்தைப் பார்த்த திரு.தேசிகன், ராஜ்கிரணின் நடிப்பில் மயங்கி படத்தை மொத்தமாக வாங்கி எஸ்.எஸ்.மீடியா நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என்றார் இயக்குனர் சத்யசிவா.

இப்படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல் சார் உதவியோட 8 ம் நூற்றாண்டுக்கு போயிட்டேன்! இசையமைப்பாளர் ஜிப்ரான் மகிழ்ச்சி

உத்தமவில்லன் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜிப்ரான். இந்த படம் மட்டுமல்ல, கமலின் மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்க அவர் அழைக்கப்பட்டபோதுதான் ஒட்டுமொத்த திரையுலகமும், பார்றா... அதிர்ஷ்டத்தை என்றது....

Close