சென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லும் “நகர்வலம்”

ரெட் கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என். ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதை நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜி, புதுமுக நாயகி தீக் ஷிதா, பாலா , யோகி பாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர் மாரிமுத்து, ரிந்து ரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவி ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தை பற்றி , ” சென்னை நகரில், குடிநீர் விநியோகிக்கும் மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன் , பல ஏரியாகளுக்கு குடிநீர் விட செல்லுகையில் , ஓர் ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும் திரைகதை அமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது ” என்றார் .மேலும், இதில் சென்னை பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை, ‘கானா புகழ்’ இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்களாக:

ஒளிப்பதிவு தமிழ் தென்றல், இசை பவன் , படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி , கலை தேவா, சண்டை பயிற்சி ‘ஃபயர்’ கார்த்திக் , நடனம் கல்யாண் , நந்தா,விமல் ராஜ், பாடல்கள் மோகன் ராஜன். சென்னை நகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணா நகர், சைதாபேட்டை, கே. கே. நகர், கண்ணகி நகர் ஹௌசிங்க் போர்டு ஏரியா போன்ற இடங்களில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Four Frames kalyanam ‘Sashti Poorthi’ Press meet Photos

Close