விழா தொகுப்பாளினியை விரட்டி வந்த இயக்குனர்…. ஆடியோ விழாவில் ஐய்யய்யோ…

இப்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வெகு சாதா‘ரணமாகி’விட்டது. ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கும் யாரையாவது சற்று பவுடர் பூச்சு ஜாஸ்தியாக்கி மேடையேற்றி விட்டுவிடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் நாம் கண்ணார கண்டு காதார கேட்டு ரசித்த(?) விஷயம் இது. வந்திருந்த விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கும் நேரம் அது. ஒவ்வொரு விருந்தினருக்கும் தயாரிப்பாளர் பூங்கொத்து கொடுத்துக் கொண்டிருக்க, தொகுப்பாளினியோ ‘இப்போது தயாரிப்பாளர் மிஸ்டர் …………. க்கு மலர் வளையம் தருகிறார்’ என்றே கூறிக் கொண்டிருந்தார். இந்த பினாத்தலுக்கு சற்றும் குறையாமல்தான் பல விழாக்கள் நடந்தேறி வருகிறது நாள்தோறும்!

‘ஈரவெயில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு அவஸ்தை. ஆனால் இவர் வேற மாதிரி.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் வெற்றிக்கு பிறகு டைரக்டர் சரவணன் இயக்கி வரும் படம் இவன் வேற மாதிரி. இவரை பேச அழைத்த தொகுப்பாளினி, எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப்பிறகு இப்போது ‘அது வேற இது வேற’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சரவணன் அவர்களை பேச அழைக்கிறேன் என்றார். அவரும் சமர்த்து பிள்ளையாக மைக்கில் பேசிவிட்டு அமர்ந்தார். அவராவது, நான் இயக்குகிற படத்தின் பெயர் அது வேற இது வேற அல்ல, ‘இவன் வேற மாதிரி’ என்று சொல்லிவிட்டு அமர்ந்திருக்கலாமல்லவா? அதையும் செய்யவில்லை.

இறுதியாக மைக்கை பிடித்த கவிப்பேரரசு வைரமுத்து, சரவணன் இயக்கிய படம் இவன் வேற மாதிரி. தொகுப்பாளினி தவறாக சொல்லிவிட்டார் என்று திருத்திவிட்டு போனார். எல்லாம் ஓய்ந்து அவரவர் கலைந்து போய்விட்டார்கள். டைரக்டர் சரவணனும் கிளம்பிப் போய்விட்டார். தொகுப்பாளினி தனக்கான பேமென்ட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்த பின்புதான் நடந்தது அந்த விபரீதம். அரங்கத்தை விட்டே கிளம்பிப் போய் அரை மணி நேரம் கழித்துதான் டென்ஷன் ஆகியிருப்பார் போலிருக்கிறது. விறுவிறுவென காரை திருப்பிக் கொண்டு நிகழ்ச்சி நடந்த ஏரியாவுக்கு வந்துவிட்டார் டைரக்டர் சரவணன்.

இவர் உள்ளே வரவும், தொகுப்பாளினி வெளியே வரவும் சரியாக இருந்தது. மளமளவென அவரை பிடித்துக் கொண்ட சரவணன், எப்படி என் படத்தின் பெயரை நீங்க தப்பா சொல்லலாம். என்னை வேணும்னு அவமான படுத்துறீங்களா என்று எகிற, அவரோ… நான் என்னங்க பண்ணட்டும்? எழுதி கொடுத்தாங்க, படிச்சேன் என்று அலட்சியமாக பதில் சொல்ல, கடுமையான வாக்குவாதம்.

நமது கேள்வியெல்லாம் இதுதான். பேசுவதற்காக தனது முறை வரும்போது ‘அவங்க தப்பா சொல்லிட்டாங்க. என் படத்தின் பெயர் இதுதான்’ என்று ஒரிரு வார்த்தைகளில் முடித்துவிட்டு போக வேண்டிய விஷயத்தை தொண்டை தண்ணி வற்றிப்போகிற அளவுக்கு வம்பளத்துதான் சொல்ல வேண்டுமா?

யோசிங்க யங் பாய்….

Anchor taken to task by a young director!

Now a days anchoring the programmes and/or shows have become an important one. However giving the anchors the right information to anchor the show is not being followed. There were several episodes anchors have faulted erraneously hurting the sentiments of the persons concerned. Despite this anchors are not being properly briefed.

One such incident happened during the audio launch of Eera Veyil. The anchor while inviting director Saravan, has said, “now director Saravan who is currently directing Adhu Vera Idhu Vera, will speak”. While we are not aware whether anchor was not properly briefed or anchor herself made the mistake by her over confidence, it really will hurt the director. However the director Saravan did not utter any word about the slip-up by the anchor and finished his speech. Lyricist Vairamuthu who spoke next corrected the error made by the anchor.

The funny party is while the director did not do anything while speaking thus making everyone to feel about his graciousness, behaved arrogantly by entering into an arguement with the achor after the programme ended and every one left the premises.

The young director has earned a name for himself through his sheer hardwork. By indulging in such frivilous acts will not add good to his name. Yes the anchor made a mistake which could have been done in a more decent way than this. Learnt it up young man!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஊடகங்களின் வளர்ச்சியை தட்டி வைங்க…’ வைரமுத்து எச்சரிக்கை!

‘லஜ்ஜாவதியே...’ பாடலை மறக்காதவர்கள் அப்பாடலுக்கு இசையமைத்து பாடிய ஜாஸிகிஃப்ட்டையும் மறந்திருக்க முடியாது. மலையாள இசையமைப்பாளரான இவரை ஏதோ இப்போதுதான் அறிமுகப்படுத்துவது போல அறிமுகப்படுத்தினார்கள் ‘ஈர வெயில்’ படத்தின்...

Close