சிறிது சிறிதாக விழுங்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்!

0

சப்பை படத்திற்கான அறிவிப்பாக தோற்றமளித்தாலும், அதில் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயர் உள்ளே வந்துவிட்டால், அதற்கப்புறம் அந்தப்படத்தின் அந்தஸ்து எங்கோ போய்விடும். அப்படியொரு கவுரவத்தை பல வருடங்களாக காப்பாற்றி வருகிறார் இசைப்புயல்.

பொதுவாகவே தான் இசையமைக்கும் பாடல்களுக்கு யார் வரிகள் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் சர்வ வல்லமை பொருந்திய சக்தியும் அவருக்கு இருந்தது. (கவனிக்கவும்… பாஸ்ட் டென்ஸ்) தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் பிடியை தளர்த்திக் கொண்டாரோ என்று ஐயுற வைக்கிறது அவரது பாடலாசிரியர் தேர்வு.

வைரமுத்து, நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன், விவேகா என்று இருந்த சாம்ராஜ்ஜியம் மெல்ல தகர்ந்தது ஒருவரால். அவர்தான் விவேக். இளம் பாடலாசிரியரான அவர், சந்தோஷ் நாராயணன் அனுகிரகத்தால் உள்ளே வந்தார். கூடுதல் தகுதி அவரது கவர்ந்திழுக்கும் வரிகள் என்றாலும், அதைவிட சிறப்புத் தகுதியாக இருந்தது இன்னொன்று. அவர் ஜட்ஜின் பிள்ளை.

காலம் வேகமாக அவரைக் கொண்டு போய் கோபுரத்தில் உட்கார வைத்துவிட்டது. ‘ஆளப்போறான் தமிழன்’ என்று ஒரு பாடலில் உச்சம் தொட்டுவிட்டார் விவேக். அதுவரைக்கும் தனது இசையில் உருவாகும் பாடல்களுக்கு எல்லா கவிஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், விவேக்கிடம் முற்றிலும் சரண் அடைந்துவிட்டதாகவே தெரிகிறது.

பொறுக்க முடியாத ஒரு பாடலாசிரியர், “சார்… எங்களையெல்லாம் மறந்துட்டீங்களே?” என்று ரஹ்மானிடம் கேட்க, “நான் என்னங்க பண்றது? டைரக்டர்கள் வற்புறுத்துறாங்களே?” என்றாராம் அவர். ரஹ்மானிடம் இப்படியெல்லாம் சொல்ல முடியாது என்பது சினிமாக்காரர்களுக்கு தெரியும்.

ஒரு வயிற்றெரிச்சல் செய்தி- விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் எல்லா பாடல்களும் விவேக்கின் திருக்கரங்களால் எழுதப்பட்டுள்ளன!

Leave A Reply

Your email address will not be published.