அனிருத் டீமில் புது என்ட்ரி! தேவையாம்மா உனக்கு?

0

‘அத்தனைக்கும் ஆசைப்படு… என்பதை ரொம்ப தப்பா புரிஞ்சு வச்சுருக்கீங்க. ப்ளீஸ்… விட்ருங்க’ என்று கோடம்பாக்கத்தில் சிலரை பார்த்தால் மட்டும் ஓட்டம் பிடிக்க வேண்டும் என பிரேம் பண்ணிவிட்டது பெண்கள் மனசு! அதிலும் ‘பார்ட்டி பாய்ஸ்’ என்று சொல்லப்படும் சிலரை கண்டால், ‘ஹலோ’ என்பதற்கு கூட கையை நீட்ட அஞ்சுகிறார்கள் ஆன்ட்டிகள் முதல், அழகிகள் வரை!

அப்படி சமீபத்தில் தன் பெயரை ரொம்பவே கெடுத்து வைத்திருக்கிறார் அனிருத்! ஏற்கனவே இருந்த நல்ல பெயரெல்லாம் (?) அடங்கி, மக்கள் மறக்க ஆரம்பித்த நேரத்தில்தான் மீண்டும் ‘சுசித்ரா லீக்ஸ்’ வடிவத்தில் வந்தது பிரச்சனை. பழைய ‘குடியிருந்த கோயில்’ படத்திற்கு, இப்போது போஸ்டர் ஒட்டியது போல, ஆன்ட்ரியாவும் இவரும் இருந்த அந்த பழைய போஸ்டர் மீண்டும் புதிய வடிவத்தில் வெளியானதால் கவன ஈர்ப்பானது ரசிகர்கள் கூட்டம்.

நாம சும்மாயிருந்தாலும், விதி விடாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட அனிருத்தும், டேக் இட் ஈஸியாகிவிட்டார். இவ்வளவு நடந்தும், எதுவும் அறியாதவர் போல அனிருத்தின் கைக்கு அடக்கமான கர்சீப்பாக என்ட்ரி ஆகியிருக்கிறார் பிரபல நடிகை மஞ்சிமா மோகன். எங்கு போனாலும் இவரும் அவரும் சேர்ந்தே போகிறார்கள்.

பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் இவ்விருவரையும் ஒன்றாக பார்க்கும் ரசிகர்கள், “அனிருத்தோட அடுத்த விக்கெட் போலிருக்கு” என்று வாய்விட்டு கமென்ட் அடிக்கிற அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது.

மஞ்சிமாவுக்கு நடிப்பை விட, இசைதான் பிடிக்கும் போல!

Leave A Reply

Your email address will not be published.