நயன் விக்னேஷ்சிவன் லவ் முறிவா? விக்ரம் சதி அம்பலம்!

1

முனை தேய்ந்த கத்தியாக இருந்தாலும், பழம் அறுக்க துடியாய் துடிக்குமல்லவா? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டது நடிகர் விக்ரமின் நிலைமை! தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து பரபரப்பாகிவிட்டது ஹீரோக்கள் வட்டாரம். அந்த செய்தி நிஜம்தானா, உண்மையிலேயே நயன்தாரா விக்னேஷ் சிவனை கழற்றிவிட்டுவிட்டாரா என்று அறிய ஆவலாக இருந்தார்கள். அவர்களுக்காக அல்ல. நிஜம் என்ன என்பதை அறிய நமது விசாரணையை முடுக்கி விட்டோம். அப்புறம்தான் தெரிந்தது…. மேற்படி செய்தியை கசிய விட்டவரே விக்ரம்தான் என்பது. ஏன் அவர் அவ்வாறு செய்ய வேண்டும்? கோடம்பாக்கத்தில் விசாரித்தால் கொட்டோ கொட்டென கொட்டுகிறது கொடுமை!

இருமுகன் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராதான் வேண்டும் என்று பழியாய் தவம் கிடந்து கமிட் பண்ண வைத்தாராம் விக்ரம். ஆனால் படப்பிடிப்பில் இப்போதும் கூட இருவருக்கும் நடுவில் கெமிஸ்ட்ரி வரவில்லை. ஆன் ஸ்கிரினில் இருக்கிற கெமிஸ்ட்ரி, ஆஃப் லைனிலும் இருந்தால்தானே முயற்சி வென்றதாக அர்த்தம்? ஆனால் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கூடவே வந்துவிடும் நயன்தாராவின் அறிவிக்கப்படாத கணவர் விக்னேஷ் சிவனால் அத்தனையும் கெட்டுப் போனது. சோடியா வந்து கேடியா செலவு பண்ணுறாங்களே என்று கூட கிளப்பிவிடுவார்கள் அல்லவா? அதற்கும் இடம் வைக்கவில்லை நயன். “விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட எல்லா செலவுகளையும் என் சம்பளத்தில் கழித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டாராம்.

நயன்தாரா அறையில் தங்கிக் கொள்ளும் விக்னேஷ் சிவன், சாப்பாடு விஷயங்களில் கூட யூனிட்டுக்கு செலவு வைப்பதில்லையாம். தனது செலவிலேயே ஓட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறார். ஆனால் எந்நேரமும் நயன்தாராவின் செக்யூரிடியாக செயல்படும் அவர், காஷ்மீர் ஷுட்டிங்கில் நயன்தாராவுடன்தான் இருந்தாராம். பின்பு அங்கிருந்து பாக்காங்க் கிளம்பியது படக்குழு. அப்போதும் விக்னேஷ் சிவனை தன்னோடு அழைத்து வர நயன்தாரா திட்டமிட, அதை தடுத்தேயாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம் விக்ரம். சென்னையிலிருக்கும் தனது கொள்கை பரப்பு செயலாளர் மூலம், விக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் முறிவு என்றொரு செய்தியை கிளப்பிவிட்டாராம் அவர். ஒரு பொய் அடுத்தடுத்து அழுத்தமாக உச்சரிக்கப்படும் போது உண்மையா இருக்குமோ? என்று எண்ண வைக்கும் அல்லவா? அப்படிதான் மேற்படி விஷயம் தமிழகத்தின் பெரிய நாளிதழில் செய்தியாகவே வந்துவிட்டது.

உண்மையில் விக்னேஷ் நயன்தாராவை ஒரு விக்ரம் அல்ல, ஓராயிரம் விக்ரம்கள் வந்தாலும் பிரிக்கவே முடியாது என்கிறது யூனிட்டிலிருந்து வரும் இளமை பொங்கும் தகவல்கள்!

மாதுளம் பழம்னு நினைச்சு வெடிகுண்டை முழுங்கிட்டாரோ நம்ம சீயான்?

1 Comment
  1. ராம் says

    டேய் கேனை கூ* உனக்கு விக்ரம் ஐ பத்தி பேசுலைனா சோறு உள்ள போகாதே.

Leave A Reply

Your email address will not be published.