கைவிட்ட ட்ரிப்பிள் ஏ! கலங்காத ஆதிக்! மீண்டும் தயாராகும் ஆபாசக் கூட்டணி!

0

யாரெல்லாம் ரப்பர் வைத்து அழிக்கப்பட வேண்டியவர்களோ, அவர்களுக்கெல்லாம் சாம்பிராணியும் போட்டு சலங்கையும் கட்டிவிட ஒரு கூட்டம் வரும். அப்படிப்பட்டவர்கள் இருக்கும்வரை ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற ஆபாசப்பட இயக்குனர்களுக்கு அழிவேது?

சமீபத்தில் வந்த அ.அ.அ படம் என்ன லட்சணத்தில் இருந்தது என்பதை யாரும் இனிமேல் பேசத் தேவையில்லை. அதற்கான பலா பலன்களை ரசிகர்கள் தந்துவிட்டார்கள். ஸ்கிரிப்டில் வெறும் ஆபாசத்தை மட்டுமே நம்பி படம் எடுத்து வரும் ஆதிக் ரவிச்சந்திரன் ஒழிஞ்சாருப்பா… என்று நிம்மதி பெருமூச்சு விட்ட சிலருக்குதான் பேதி மருந்தை கொடுத்திருக்கிறார் ஆதிக். எப்படி?

ட்ரிப்பிள் ஏ படத்தை துவங்குவதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 20 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டாராம். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மாதிரி ஒரு படம் வேணும். அதே படத்தின் பார்ட் 2 வா இருந்தாலும் ஓகேதான் என்று கூறியிருக்கிறார். அப்படியே ஜி.வி.பிரகாஷுக்கு வெயிட்டாக ஒரு அட்வான்சையும் தட்டிவிட்டிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.

ட்ரிப்பிள் ஏ வின் படு பயங்கர விமர்சனத்திற்கும், பப்பரக்கா தியேட்டர் ரிசல்ட்டுக்கும் அஞ்சாத அந்த தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன்ஆதிக் ரவிச்சந்திரனை அணுகினாராம். உங்களால் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க முடியும். இந்தப்படம் வீணா போனதுக்கு நீங்க காரணமில்லேன்னு எனக்கு தெரியும். எப்ப வேணும்னாலும் நம்ம படத்தை ஆரம்பிக்கலாம் என்று பச்சைக் கொடி காட்ட…. படு பயங்கர தெம்பாகிவிட்டார் ஆதிக்.

ஆபாசத்திற்கு அழிவேது?

Leave A Reply

Your email address will not be published.