20 நாள் பாங்காக்! ரெண்டு நாள்தான் ஷுட்டிங்! அலறவிட்ட சிம்பு? என்ன செய்யப் போகிறார் விஷால்?

1

நடிகர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் நிமிஷம் வினாடிகளுக்கெல்லாம் வேல்யூ தெரியும். 60 நாள் கால்ஷீட்டுக்கு சம்பளம் முப்பது கோடி என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் அந்த ஹீரோவின் ஒரு மணி நேர வேல்யூ 20 ஆயிரத்து சொச்சம். அவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலோ, மூட் இல்ல என்று படப்பிடிப்பை கேன்சல் செய்தாலோ, தயாரிப்பாளரின் நெஞ்சு எப்படியெல்லாம் துடிக்கும்?

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு போன் போட்டு, அதை அவரது நெஞ்சில் வைத்துக் கேளுங்களேன். இடி மின்னல் சப்தம்தான் கேட்கும் அங்கிருந்து. விஷயம் இதுதான். டைரக்டர் ஆதிக் சிம்பு மற்றும் கதாநாயகிகள் புடைசூழ பாங்காக் கிளம்பினார்கள். இருபது நாட்கள் ஷுட்டிங் நடத்துவதுதான் திட்டம். மனக்கணக்கு, பணக்கணக்கு, எல்லாவற்றையும் முன் கூட்டியே கூட்டிக் கழித்து பார்த்த தயாரிப்பாளர், எப்படியும் பத்து நாள் வேஸ்ட் பண்ணினாலும், மிச்ச பத்து நாள் ஷுட்டிங்காவது ஒழுங்கா நடக்கும் என்று நம்பினாராம். அந்தோ பரிதாபம். வெறும் இரண்டே நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

புட்டேஜுடன் திரும்பி வந்த ஆதிக், “அவ்ளோதான் எடுக்க முடிஞ்சுது” என்று ஐயோ பாவமாக கூற, அதைவிட ஐயோ பாவம் ஆகிவிட்டார் மைக்கேல். கதவை சாத்திக் கொண்டு காச் மூச்சென்று கதறியவர், ஒரு வழியாக கதவை திறந்து “நடந்தது நடந்து போச்சு. மறுபடியும் பாங்காக் போவணும்னு பீதிய கிளப்பிடாதீங்க. இங்கேயே ஐதராபாத், அகமதாபாத்துன்னு ஒரு லொக்கேஷனை சூஸ் பண்ணி படத்தை முடிங்கப்பா” என்று கூறிவிட்டு மீண்டும் கதவை சாத்திக் கொண்டு கண்ணீரை கண்ட்டினியூ செய்ய ஆரம்பித்தாராம்.

எப்படியிருந்தாலும் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் விஷாலிடம் பஞ்சாயத்து கூட்டுவார்கள். அவர் என்ன பண்ணப் போகிறாரோ? அங்குதான் உடையப் போவுது மனுநீதிச் சோழனின் மண்குடம்!

1 Comment
  1. Sandeep says

    simbu is a lazy guy, may the worst in entire india or may be in the entire world. Wating produser’s money for 18 days in the total of 20 days is cruel. may be another stupid producer there for his next movie.

Leave A Reply

Your email address will not be published.