பண்டிகை கால தள்ளுபடி கிருஷ்ணா!

0

முப்பது லட்சம் சம்பளம் வாங்கிட்டு, முப்பது கோடிக்கு நடிச்சுக் கொடுக்கிற தாராள(?) மனசுக்காரர்தான் கிருஷ்ணா. அவரை அடக்கி ஒடுக்கி நடிக்க வைக்கிற அங்குசம் மட்டும் எங்கேயிருக்கிறதென்றே தெரியவில்லை. அப்படியிருந்தும் கிருஷ்ணாவுக்கு படங்கள் வந்து கொண்டுதானிருக்கிறது. சென்னை 28 விஜயலட்சுமி, கிருஷ்ணாவின் நண்பர் என்பதால் மீண்டும் அடிச்சுது லக்கி. யெஸ்… விஜி தயாரித்து, அவரது கணவர் பெரோஸ் இயக்கிய ‘பண்டிகை’ படத்தில் கிருஷ்ணாதான் ஹீரோ.

ஒரு விஷயத்தில் பெரோஸ் புத்திசாலி. முதல் நாள் நடிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணா. படக்கென்று ‘கட்’ சொன்ன பெரோஸ், “இவ்ளோ எக்ஸ்பிரஷன் தேவையில்ல. கொஞ்சம் குறைச்சுக்கலாம்” என்றார். ஷாட் கன்ட்னியூ. நடுவில் மீண்டும் ஒரு கட். “இவ்ளோ கூட வேணாம். இன்னும் கம்மியா…” என்று கூற, கிருஷ்ணாவின் நாடி நரம்பு இயல்பு நிலைக்கு வந்தது. அதற்கப்புறமும் மூன்று முறை கட். மூன்று முறை “இன்னும் கம்மி” டயலாக். அப்புறமென்ன…? கிருஷ்ணா இயல்பான நடிகராகிவிட்டார். அடங்காத ஒரு குட்டி யானையை, அடக்கி அடக்கி கன்னுக்குட்டியாக்கிவிட்டார் பெரோஸ்.

இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப்படத்தை நாம் கொண்டாடிவிடலாம். ஆனால் கதை, அது சொல்லப்பட்ட திரைக்கதை இவற்றால் கவரப்பட்ட ஆரா சினிமாஸ் நிறுவனம், உலகம் முழுக்க இப்படத்தை வெளியிட முன் வந்திருக்கிறது. பரிசு அதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. பெரோஸ்… நீங்க நம்ம கம்பெனிக்கு ஒரு படம் இயக்கித் தரணும் என்று வெயிட்டாக ஒரு அட்வான்சும் கொடுத்திருக்கிறது.

அகத்தியன் என்ற மாபெரும் இயக்குனரின் மகளான விஜயலட்சுமியை மனைவியாக்கிக் கொண்ட பெரோசுக்கு, மாமனார் மெச்சிய மருமகன் பட்டத்தை கொடுத்திருக்கிறது ஆராஸ் நிறுவனம். குடும்பமே எழுந்து நின்று கொண்டாடுங்க விஜி…

Leave A Reply

Your email address will not be published.