நிருபர்களின் அழைப்புக்கு அஞ்சி ஜெயம் ரவிக்கு விபத்து செட்டப்?

0

கடந்த இரண்டு நாட்களாகவே ஒரு கதை திருட்டு விவகாரம் காரசாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஜெயம் ரவி நடித்து வரும் ‘போகன்’ படக்கதை, என்னுடையது’ என்று பிரச்சனையை கிளப்பி வருகிறார் ஆன்ட்டனி என்ற அறிமுக இயக்குனர். இந்த விவகாரத்தால் படத்தின் இயக்குனர் லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் தன்னை ஆள் வைத்து தாக்கியதாகவும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

ஆனால் இது தொடர்பாக ஆரம்பத்தில் விசாரித்த திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் விக்ரமன் மிக தெளிவாக ஒரு விஷயத்தை போட்டு உடைத்துவிட்டார். “போகன் சில ஆங்கில படங்களின் காப்பி. இரண்டு டைரக்டர்களுமே டிவிடியை காப்பியடித்துதான் கதை எழுதியிருக்கிறார்கள். ஆன்ட்டனியால் உரிமை கொண்டாடுவதற்கு இதில் எதுவும் இல்லை” என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் ஐயோ பாவம்.. என்று நினைத்து ஆன்ட்டனிக்கு பத்து லட்சம் பணம் வாங்கித் தர முன் வந்ததாகவும் அதற்கு லட்சுமணன் சம்மதிக்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்துவிட்டார்.

இது ஒரு புறமிருக்க, ஜெயம் ரவிக்கு போகன் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது. விசாரித்தால், கெக்கேபிக்கே என்று சிரிக்கிறார்கள் யூனிட் ஆட்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. சார் வீட்ல சும்மாதான் ரெஸ்ட் எடுக்கிறார் என்கிறார்கள். ஏன் இப்படியொரு பரப்புரை?

வேறொன்றுமில்லை. இந்த கதை திருட்டு விஷயமாக ஜெயம் ரவிக்கு போன் அடித்து விளக்கம் கேட்க முயன்றார்கள் சில நிருபர்கள். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், இந்த கதை திருட்டு விவகாரத்தில் தலையிட்டாலும், நாளைக்கு நாம்தான் பதில் சொல்லியாக வேண்டும் என்று நினைத்த ஜெயம் ரவி ஆக்சிடென்ட் என்ற போர்வையில் எஸ்கேப் ஆகிவிட்டார்.

நல்ல ஐடியா! நாலு பேருக்கு சொல்லிக் கொடுங்க ரவி…

To listen Audio Click below:-

Leave A Reply

Your email address will not be published.