நடிகையை கடத்திய கார்த்திக் சுப்புராஜ்? கன்னடத்தில் கதறல்!

0

எத்திக்ஸ், கோட்பாடு, நம்பிக்கை, நாணயம், இப்படி எவ்வித புண்ணாக்குக்கும் செவியையும் மனதையும் சாய்க்காத ஒரே துறை சினிமாதான் போலிருக்கிறது. ஏரியாவெங்கும் பல்வாள் தேவன்களும், அவங்க அப்பன்களுமாக நடமாடினால், யார்தான் நிம்மதியாக இருக்க முடியும்? பெரும் புலம்பலில் சிக்கித் தவிக்கிறார் கன்னட பட தயாரிப்பாளர் பத்மநாபன். காரணம் கார்த்திக் சுப்புராஜ்.

இறைவி படத்தின் மாபெரும் தோல்விக்குப் பின்பும், 40 கோடி செலவில்தான் படமெடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், தனுஷுக்கு கதை சொல்லி வந்தார். அதில் என்ன மாறுதலோ? பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கிளம்பியிருக்கிறார் அவர். இந்தப்படத்தினால்தான் பத்நாபனுக்கு சிக்கல்.

சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் பிரமாண்டமான விழாவுடன், தன் இரண்டாவது படத்தின் ஷுட்டிங்கை ஆரம்பிக்கவிருந்தார் அவர். கேமிராவை ஆன் பண்ணிவிட்டு ஹீரோயினுக்காக காத்திருந்தால், அவர் சென்னைக்கு வந்துவிட்டார். அவர் பெயர் சம்யுக்த ஹெக்டே.

நடுவில் இந்த அழகு ஹீரோயினை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ்,  “வாம்மா… பிரபுதேவாவுக்கு ஜோடியா நடிச்சா இந்தியா முழுக்க பேமஸ் ஆகிவிடலாம். ரெண்டே படத்துல கோடிகள் கொட்டும்” என்று கூறி சென்னைக்கு வரவழைத்துவிட்டாராம்.

யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார் சம்யுக்தா. இந்த சம்யுக்தாவை வைத்து பெரும் பொருட் செலவில் போட்டோ ஷுட், கட் அவுட்டுகள், விளம்பரங்கள், டி.வி விளம்பரங்கள் என்று அமர்க்களப்படுத்திய தயாரிப்பாளருக்கு, இவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன தகவலே முதல் நாள் ஷுட்டிங்கின் போதுதான் தெரியுமாம். சென்னையிலிருக்கும் நடிகர் சங்கத்திலும், கன்னட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார் பத்மநாபன்.

சம்யுக்தாவுக்கு போன் அடித்தாலும் சரி, கார்த்திக் சுப்புராஜுக்கு போன் அடித்தாலும் சரி. இருவருமே எடுப்பதில்லையாம். இந்த அநீதியை கண்டு மனம் புழுங்கிப் போன பத்மநாபனுக்கு ஆறுதல் சொல்ல வரும் சினிமா பிரபலங்கள், “என்னங்க… உங்க ஹீரோயின டைரக்டர் ஒருத்தர் கடத்திட்டு போயிட்டாராமே” என்று கேட்க, ஒருவேளை கார்த்திக் சுப்புராஜ் கடத்திட்டாரோ என்கிற அளவுக்கு கன்பியூஸ் ஆகிக் கிடக்கிறாராம் அவர்.

நதியோ, சாக்கடையோ? ரூட் மாறி பாய்வதுதான் இப்போதைய ஸ்டைல் போலிருக்கு!

Leave A Reply

Your email address will not be published.