நடிகைகளுக்கு சேஃப்டி! டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் சொல்வது சரியா?

0

நடிக்க வந்துவிட்டால் போதும். பெண்கள் தங்கள் கற்பை பேங்க் லாக்கரில் வைத்திருந்தால் கூட, மீட்க முடியாது! கோலிவுட் மட்டுமல்ல, இத்தகைய அடாவடித்தனத்தை எல்லா ‘வுட்’டுகளும் கடைபிடித்து வருகின்றன. ‘நடிக்க வந்த புதிதில் நான் போர்ஸ் பண்ணப் பட்டேன்’ என்று வாய் திறந்து பேசும் நடிகைகள் இன்று பெருகிவிட்டார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே நடிக்க ஹோப் இருந்தும், “போங்கடா நீங்களும் உங்க பீல்டும்” என்று தலை தெரிந்து ஓடும் இளம் பெண்கள், கல்யாணம் குடும்பம் என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

இந்த எண்ணத்தை நேற்று பொடி பொடியாக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் புகழ் இயக்குனரான இவர் தற்போது சத்ரியன் என்ற படத்தை இயக்கிவிட்டு ரிலீசுக்காக காத்திருக்கிறார். இனிகோ பிரபாகர், செங்குட்டுவன், ஸ்ரீப்ரியங்கா நடித்திருக்கும் படம் பிச்சுவா கத்தி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர் சில கருத்துக்களை சொல்லப் போக… அப்படியா சார்? என்று வாயைடைத்து நின்றது ஸ்டேஜ்.

“இந்தப்படத்தின் ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா ஒரு தமிழ்ப்பெண். பாண்டிச்சேரியை சொந்த ஊராக கொண்டவர்னு கேள்விப்பட்டேன். இவங்களை போல தமிழ்பெண்கள் நிறைய நடிக்க வரணும். சினிமா பீல்டு முன்பு போல இல்லை. இப்போ பெண்களுக்கு நல்ல சுதந்திரம் இருக்கு. பெண்களை மதிக்க பழகியிருக்காங்க” என்றார்.

அவர் இப்படி சொன்னதும் அருகிலிருந்த ஸ்ரீபிரியங்கா அதை ஆமோதிப்பது போல இரு கை கூப்பி வணங்கினார். ஒவ்வொரு மேடையிலும் நான் சுத்தமான தமிழ் பொண்ணு. எனக்கு வாய்ப்பு கொடுக்க ஏன் தயங்குறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் ஸ்ரீபிரியங்கா, நேற்று அந்த பேச்சை ரிப்பீட் பண்ணவில்லை. அவருக்கு பதிலாகதான் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசிவிட்டாரே?

ஆமா… நீங்க சொல்றது நெசந்தானா பிரபாகரு?

Leave A Reply

Your email address will not be published.