மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா! அரை சம்மத மூடில் அஜீத்!

0

விஷாலை இன்னும் தலைவராக ஏற்றுக் கொள்கிற மூட் அஜீத்திற்கோ, விஜய்க்கோ வந்து சேரவில்லை. இதற்கு முன் பலமுறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் உறுதியாகவே இருக்கிறார் விஷால். அதில் ஒரு திருப்பணிதான் மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நட்சத்திர இரவு. அதாவது ஸ்டார் நைட்.

ஒவ்வொரு முறையும் உண்டியலோடு வரும் தமிழ்சினிமா நட்சத்திரங்களை, வேண்டும் வேண்டும் என்று நிரப்பி அனுப்புகிற மகத்தான கடமை மலேசிய சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இருக்கிறது. அது அலுத்துப் போகாதவரை நல்லது.

இந்த முறை இந்த ஸ்டார் நைட்டில் கலந்து கொள்ள வைப்பதற்காக அஜீத் விஜய் இருவரிடமும் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார் விஷால். இதற்கு முன் எப்படியோ? இந்த முறை சற்றே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்திருக்கிறதாம் அவர்களிடமிருந்து.

முக்கியமாக எந்த நிகழ்ச்சிக்கும் தலைகாட்டாத அஜீத், இந்த முறை “சொல்றேன்…” என்று ஒரு பதிலை கூறியிருப்பது பெரும் வியப்பாக கருதப்படுகிறது. அவரது சொல்லுக்காக நடிகர் சங்கத்தின் கட்டப்படாத செங்கற்கள் கூட வெயிட்டிங்… வெயிட்டிங்….

Leave A Reply

Your email address will not be published.