அஜீத் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அழிக்க நினைத்தாரா விஜய் சேதுபதி?

2

‘திருப்பதி லட்டு இங்கே கிடைக்கும்’ என்று அடையார் ஆனந்தபவனில் போர்டு வைத்தால், பக்தர் கூட்டம் பரவசப்படுமா? கிட்டதட்ட அப்படியொரு கேள்வியை உருவாக்கிவிட்டார் விஜய்சேதுபதி. மே 1 ந் தேதியான நேற்று, அஜீத்தின் பிறந்த நாள் என்பது அவரை பாராட்டுகிறவர்களுக்கும் அதற்கு சரிக்கு சரியாக நின்று திட்டுகிறவர்களுக்குமான நாளாக மாறியிருந்தது. அவரது பெரிய ரசிகர் கூட்டம் ஒன்று, அலகு காவடிதான் எடுக்கவில்லை. மற்றபடி அன்னதானம், கூல் ட்ரிங்ஸ் தானம், இரத்த தானம் என்று அமர்க்களப்படுத்தினார்கள்.

உடனுக்கு உடன் சோஷியல் மீடியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த விசேஷ படங்களை, மாலை ஆறு மணிக்கெல்லாம் காலி பண்ணினார் விஜய் சேதுபதி. அஜீத் செய்திக்கு இணையாக உலா வந்தன விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட படங்கள்.

சென்னையில் நேற்று நடந்த ‘உலகாயுதா’ என்ற அமைப்பு சார்பில் சினிமா சங்கங்களுக்கு தரப்பட்ட மரியாதை விழாவில் சேதுபதிதான் சீஃப் கெஸ்ட். பல்வேறு சினிமா சங்கங்களை சார்ந்தவர்களுக்கு தலா ஒரு பவன் வீதம் 100 பவுன் வழங்கப்பட்டது. அத்தனை செலவும் விஜய் சேதுபதியின் செலவுதான்.

இந்த விழா படங்களும் அவரது ஸ்பீச்சும் நேற்றைய இரவை கபளீகரம் செய்து கொள்ள, ‘அஜீத்தாயணம்’ கொஞ்சம் களை இழந்தது என்னவோ நிஜம். நல்லவேளையாக… இப்படியொரு கெட்டப்பெயர் நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே அஜீத்திற்கு அற்புதமான ஒரு பிறந்த நாள் வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார் அவர்.

அதில் ‘தமிழ்சினிமாவின் எம்பரர்கள்’ என்று அஜீத்தையும் ரஜினியையும் பாராட்டியிருந்தார் விஜய் சேதுபதி.

2 Comments
  1. தமிழ்ச்செல்வன் says

    அஜித் ஒரு சுயநலக்காரன். அவன் ஒரு மலையாளி.
    அவன் ஒரு தமிழ் இன துரோகி .
    தமிழ்நாட்டில் பிறந்த நன்றாக தமிழ் பேசி நடிக்கும் மனிதாபிமானமுள்ள விஜய் சேதுபதி படத்தை பார்ப்போம்.,

  2. அருணன் says

    இந்த பிழைப்பிற்கு நீங்கள் பிச்சைஎடுத்து சாப்பிடலாம்

Leave A Reply

Your email address will not be published.