எம்.எஸ்.வி மறைவு அஜீத் அலட்சியம்!

2

ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத் தெரியாது. டி.வி சேனல் மாற்றத் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஆர்மோனியமும் அதில் வழியும் இசையும்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத அப்படிப்பட்ட ஒருவரின் இறுதி சடங்குக்கு சென்னையிலிருந்தும் வராத அஜீத்தை என்னவென்று சொல்வது? (இத்தாலியிலிருந்து அவர் ஊர் திரும்பி இரண்டு நாட்களாச்சாம்)

இத்தனைக்கும் ‘காதல் மன்னன்’ படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்தவர் எம்.எஸ்.வி. என்னதான் கேரவேனுக்குள் நுழைந்து கொண்டாலும், நடிக்கிற அந்த நிமிடத்திலாவது பழகியிருக்க மாட்டார்களா என்ன? அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்வதற்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி வரும்போது, உலக நாயகன் கமல் வரும்போது, அஜீத்திற்கு இணையான விஜய் வரும்போது, ஏன் எம்.எஸ்.வி யுடன் பழகிய அஜீத் வரவில்லை? கோடம்பாக்கத்தில் ஏராளமான உதடுகள் உச்சரிக்கும் கேள்வி இது.

அதையெல்லாம் தாண்டி இன்னொன்றையும் சொல்லி சொல்லி மாய்கிறது அந்த உதடுகள். எம்.எஸ்.வி வாழ்ந்தது தமிழ்நாட்டில் என்றாலும், பிறந்தது கேரளாவில்தான். அஜீத் வாழ்வது தமிழ்நாட்டில் என்றாலும், பிறந்தது கேரளாவில்தான். அந்த பந்த பாசத்திற்காகவாவது அவர் வந்திருக்கலாமே என்பதுதான் அவர்களது கேள்வி?

ஒருவேளை இந்த மரணத்தையும், அந்த இறுதி சடங்கையும் அஜீத் தன் படத்தின் ஆடியோ ரிலீஸ், மற்றும் தியேட்டர் பிரமோஷன் என்று நினைத்து வராமல் விட்டுவிட்டாரோ என்னவோ?

2 Comments
  1. kumar says

    This man is not respecting any one but part of the foolish tamil people and the media’s are trying create a saint image for him, first of all he is not a tamil . How can this man will become a super star of tamil naadu.

  2. தமிழ் குமரன் says

    தமிழ் உணர்வு உள்ள அனைவரும் இந்த மலையாளி படத்தை புறக்கணிக்க வேண்டும். இனி இவன் படத்தை பார்க்கும் தமிழர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.