அந்த குடும்பத்திலிருந்து நீங்க மட்டும் எப்படி? விக்ரம் பிரபுவை அதிர வைத்த அஜீத்!

0

‘நடிகர் திலகம் வீட்டு சாப்பாடு நாலு ஊருக்கு மணக்கும்’ என்பது கோடம்பாக்கத்தின் டாப் லெவல் கலைஞர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம். பிரபு ஷுட்டிங் போனால், அவருக்கான சாப்பாடு மட்டும் தனி காரில் பின்னால் வரும். அந்த யூனிட்டே ஊர்வன பறப்பன ஐட்டங்களை சுட சுட உள்ளே தள்ளும்! ருசியும் அப்படியிருக்குமாம்…

தன் மகன் விக்ரம் பிரபு ஹீரோவான பிறகு, அப்பா பிரபு நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவரது யூனிட்டில் நடிக்கும் நடிகர்களுக்கு அந்த ருசியும் இல்லாமல் போனது. இந்த சாப்பாட்டு கலாட்டாவை நன்கு உணர்ந்த எவரும் விக்ரம் பிரபுவை பார்த்தால் ஜர்க் அடிப்பார்கள். ஏனென்றால் ஃபிட்டுன்னா ஃபிட்டு. அப்படியொரு ஃபிட் அவர்! இந்த ஆச்சர்யத்தை தன் வாயாலேயே கேட்டுவிட்டாராம் அஜீத். அதுவும் சிரித்துக் கொண்டே.

‘சிகரம் தொடு’ படத்தை சற்று தாமதமாகதான் பார்த்தாராம் அஜீத். பார்த்த வேகத்தில் விக்ரம் பிரபுவுக்கு போன் அடித்துவிட்டார்.

ஜி… (இப்படிதான் அழைத்துக் கொள்வார்களாம் அஜீத்தும் விக்ரம் பிரபுவும்) இன்ஸ்பெக்ட்டர் கேரக்டர்லை ரொம்ப ஃபிட்டா பொருந்தியிருக்கீங்க, அந்த பேமிலியிலிருந்து உங்களால மட்டும் எப்படி இவ்வளவு ஃபிட்டா இருக்க முடியுது?’ என்றாராம். நல்லவேளை… விக்ரம் பிரபு கோபித்துக் கொள்ளவில்லை. அஜீத் நடித்த அசல் படம் சிவாஜி குடும்பத்தின் தயாரிப்பு அல்லவா? அப்பவே விருந்தால் அடித்து உட்கார வைத்துவிட்டார்களாம் அஜீத்தை.

அந்த குடும்பத்தின் பாச மழையிலும், விருந்து உபசரிப்பிலும் விழுந்து புரண்ட அஜீத், இப்படியொரு கேள்வி கேட்டதில்தான் என்ன தவறு இருக்க முடியும்?

Leave A Reply

Your email address will not be published.