வருகிற சட்டமன்ற தேர்தலில் அஜீத் அரசியலுக்கு வருவார்! போட்டுத் தாக்கும் சாமியார்!

0

பழனி மலை அடிவாரத்திலிருக்கிறார் அசோக்ஜி. பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கைக்குரிய சாமியாராக இருக்கும் இவர் ‘வாயை திறந்தால் வேத வாக்கு. விரலை அசைத்தால் தேவ பாஷை’ என்று நம்புகிறது ஊரும் ஜனமும்! ஏன் அப்படி? அரசியல் பற்றி அவர் சொன்ன கருத்துக்கள் யாவும் பலித்து வருவதால்தான்.

2015 ல் வெள்ளம் வந்ததல்லவா? அப்போது,‘ சென்னையே தத்தளிக்கப் போகிறது. உயிர் பிழைக்க நினைப்பவர்கள் ஊரை விட்டு ஓடுங்கள். அரசாங்கமே ஜனங்களை காப்பாற்று’ என்று இவர் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வாட்ஸ் ஆப்பில் ஆடியோ பைல் அனுப்பியதை இப்போதும் மறக்க முடியாது. அப்படிப்பட்டவர் சொல்லும் அரசியல் கருத்துக்களுக்கு ஒரு வேல்யூ இருக்கும் அல்லவா?

அதனால்தான் இப்போது நமது இணையதளமும் இந்த செய்தியை பகிர்கிறது. அப்படியென்ன சொல்லியிருக்கிறார் அசோக்ஜி?

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றிபெற்று நாடாளப் போகிறது. அந்த தேர்தலில் ரஜினியின் சப்போர்ட் காங்கிரசுக்குதான் இருக்கும். தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் அதிமுக அரசு பெரும் சங்கடத்தை சந்திக்கும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அஜீத் அரசியல் களம் இறங்குவார். இப்படி அதிரடி செய்திகளை நாட்டுக்கு சொல்லியிருக்கும் அசோக்ஜி, எப்போதும் போலவே ‘நடக்குதா, இல்லையா பாருங்க’ என்று சவால் விடுகிறார்.

நமது இணையதளத்தில் ஏற்கனவே ஒரு ஜோதிடர் கூறியிருந்தபடி, அஜீத் அரசியலுக்கு வருவதை மேலும் ஒருவர் உறுதிபடுத்தியிருப்பது தற்செயலாக நிகழ்ந்திருக்கிறது. இருந்தாலும் அது நற்செயலா, இல்லையா? என்கிற விவாதத்தை தவிர்க்க முடியாதல்லவா?

ஆரம்பிங்கப்பா அடுத்த முணுமுணுப்பை!

Leave A Reply

Your email address will not be published.