அஜீத்திற்கு எதிராக கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் குமுறல்! ஒருவாரம் கெடு?

1

மனுஷனுக்கு வெறி வந்தா அப்படி வரணும்? இல்லேன்னா நாலு புரோட்டாவ புட்டு தின்னுட்டு செவனேன்னு இருக்கணும் என்று கட்சிக்காரர்களே அசந்து போகிற அளவுக்கு அழிச்சாட்டியம் பண்ணுவது கன்னட வெறியர்களின் ட்யூட்டி! குரங்கு கையில சிரங்கு புடிச்ச மாதிரி, அவங்களுக்கு ஒரு விஷயம் சிக்குச்சுன்னா சும்மாவா இருப்பாங்க? ஒட்டுமொத்த கன்னட படவுலகமும், கவனிக்கிறேன்டா உங்களை என்று கிளம்பிவிட்டது.

இவ்வளவு களேபரத்திற்கும் காரணம் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ கன்னட டப்பிங் படம்தான்! ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் இப்படத்தை கன்னடத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கன்னட படம் ஓடும் தியேட்டர்களில் ஒரு தமிழ் ஹீரோ படமா? என்று கொதித்தெழுந்த நடிகர்கள், “அந்த படத்தை உடனே தூக்கு” என்று தியேட்டர்களை மிரட்டி வருகிறார்கள்.

ஒரு படி மேலே போன கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ், “இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழ் படங்கள் நம்ம லாங்குவேஜ் டப்பிங் ஆகி உள்ள வர்ற விவகாரத்திற்கு முடிவு கட்றேன். இல்லேன்னா அஜீத் படம் ஓடும் தியேட்டரை கொளுத்துறேன்” என்று மிரட்டியிருக்கிறார்.

எல்லா தகவல்களும் அஜீத்தின் காதுக்கு உடனே போனதாம்! நடித்துக் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்று வம்பு தும்புக்கு போகாத அஜீத், மவுனமாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அஜீத் படம் ஓடும் தியேட்டரை கொளுத்தினால், நஷ்டம் தமிழனுக்கல்ல என்பது அந்த ‘வுட் ஹெட்’டர்களுக்கு எப்போ புரியும்? எப்படி புரியும்?

1 Comment
  1. John David says

    Ajith is a selfish gay

Leave A Reply

Your email address will not be published.