வில்லங்கத்தில் முடிந்தது விஜய் படம்? அஜீத்தோடு இணையும் அட்லீ!

2

இந்த செய்தியை வாசிப்பதற்கு முன்… இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது.

அஜீத்தின் ஆடிட்டர்தான், அட்லீயின் அப்பா!

தெறி படம் வெளி வருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்தார் விஜய். “என் பிறந்த நாள் கிஃப்ட் இதுதான். சீக்கிரம் ஒரு கதையை சொல்லுங்க. உங்களுக்கு என் கால்ஷீட் எப்பவும் உண்டு!” கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஒரு படைப்பாளிக்கு இதுதானே பேரின்பம்? நிஜமாகவே ஆனந்த நிலைக்கு ஆளானார் அட்லி. தெறி படம் இருவரும் நினைத்தது போலவே செம ஹிட். நடுவில் பரதன் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அட்லி இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப் போகிறார் என்று ஊர் உலகமே நினைத்திருக்க, யாருக்கும் தெரியாமல் சைலன்ட்டாக நடந்தது அந்த பேச்சு வார்த்தை.

அட்லீயை வரச்சொல்லி கதை கேட்டிருக்கிறார் அஜீத். அந்தக் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, தற்போது சிறுத்தை சிவா இயக்கப் போகும் படம் முடிந்த கையோடு இந்த படத்தை ஸ்டார்ட் பண்ணலாம் என்று கூறிவிட்டாராம். விஜய், அவரை விட்டால் அஜீத், இவர்கள் இருவரையும் விட்டால் ரஜினி என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் உட்சபட்ச கனவாக இருக்க முடியும். அட்லீக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்புக்கு பின்னால் என்ன இருக்கிறது. அவர் வைத்திருந்த கதையா? அல்லது அதையும் தாண்டிய சிபாரிசா? அல்லது… அட்லி மீது விஜய் வைத்திருந்த நம்பிக்கையா?

எதுவும் புரியவில்லை. “இதெல்லாம் பொய்… தவறான தகவல்” என்று இப்போதைக்கு மறுப்பு வரலாம். ஆனால் உண்மை, எல்லா சமாளிப்ஸ்களையும் விட வலிமையானதாச்சே?

2 Comments
 1. selva says

  Thannai pugalnthu pesuvatharga cila website ku panam kudukirar enru ajith enru dinamalar news la padithen ana athu ippo unmai enru nampugiren
  Ean intha kevalamana puthi ungaluku ananathanan
  Thu
  Nan munnave soli iruke oruthara pidikkalaya avunga news poda venamnu

  1. Vijay says

   Boss.. Ivanga news poduratha ajith nallavar vallavaru solrathukuthan kaasu vanguranga… Athepola Vijay ah pathi negative talk spread panrathu than ivanuga full time job.. Ellam Vijay valarchi than

Leave A Reply

Your email address will not be published.