உலகத்துல எங்காவது இப்படியெல்லாம் நடக்குமா?

மீண்டும் அந்த விஷயத்தை பற்றி எழுத வேண்டுமா என்று மனசு நினைத்தாலும், நல்லதை சொல்றதுக்கு எதுக்கு தயக்கம் என்கிற அடிப்படையில் மீண்டும் தொடருது அதே மேட்டர்!

கடந்த சில தினங்களுக்கு முன் ‘அமெரிக்காவில் தவித்த மாணவன், அள்ளி அரவணைத்தார் அஜீத் ’ என்றொரு செய்தியை நமது நியூதமிழ்சினிமா.காம் -ல் வெளியிட்டிருந்தோம். செய்தி வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே நம்மை தொடர்பு கொண்ட அஜீத் தரப்பு, ‘இந்த உதவி மட்டுமல்ல, அஜீத் சார் தான் செய்யுற எந்த உதவியும் மீடியாவுல வரக் கூடாதுன்னு தெளிவா இருப்பார். அதுமட்டுமல்ல, யாருக்காவது உதவி செய்யணும்னு நினைச்சா, அதை சம்பந்தப்பட்டவங்களுக்கு கூட யார் செஞ்சதுன்னு தெரியாம செஞ்சுட்டு வரச் சொல்லுவார். உங்கள் செய்தி அவர் மனசை ரொம்பவே புண் படுத்திருச்சு. எனக்கே இப்படியிருந்தா உதவி பெறும் அந்த ஓவியருக்கு எப்படியிருக்கும்? அந்த செய்தியை நீக்க முடியாதான்னு கேட்டார் ’ என்றெல்லாம் நம்மிடம் கூற, யாருக்கும் எவ்வித சங்கடமும் வரக் கூடாது என்பதற்காக அந்த செய்தியை உடனே நீக்கிவிட்டோம்.

ஆனால் வேறு பல இணையதளங்கள் அதற்குள் அந்த செய்தியை எடுத்து வெளியிட்டு விட்டார்கள். இதற்கிடையில் அந்த ஓவியர் இந்த விஷயம் வெளியே பரவி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டார். நேரடியாக அஜீத்துக்கு போன் செய்து, ‘ஸார்… உங்களுக்கு நிறைய தொந்தரவு கொடுத்துட்டேன். என்னை மன்னிக்கணும். உங்கள் உதவியை பெறுவதற்கு என் மனசு இடம் கொடுக்கவில்லை. அதனால் பணம் அனுப்பி தருவதை தயவு செய்து நிறுத்தணும் ’ என்று கேட்டுக் கொள்ள, பதறியே போனார் அஜீத்.

‘மீடியாவுல செய்தி வந்ததற்கு நாங்கள் யாரும் காரணமல்ல, தயவுசெய்து நான் செய்யிற உதவிய மறுக்கக் கூடாது. உங்கள் மகனுக்கு கூட நான்தான் உதவி செஞ்சேன்னு சொல்லாதீங்கன்னு சொல்லியிருக்கேன். அப்படியிருக்க, இந்த விஷயம் எப்படி மீடியாவுக்கு போச்சுன்னு தெரியல. ப்ளீஸ்… மறுக்காமல் இந்த உதவியை ஏற்றுக் கொள்ளணும் ’ என்று கவலைப்பட்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல, தனது மேனேஜரை ஓவியரின் வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டார். அதற்கப்புறம் தொகை கை மாறியது.

உதவி செய்கிறவர்களே நேரில் போய் வற்புறுத்தி ஒரு உதவியை செய்வது உலகத்திலேயே இதுதான் முதல் தடவை. அஜீத்தின் கொடையுள்ளத்தை எப்படி போற்றுவது? அவர் நீடுழி வாழட்டும்…

முக்கிய குறிப்பு- இந்த செய்தியையும் நீக்கச் சொல்லி அஜீத் அலுவலகத்திலிருந்து நம்மை தொடர்பு கொள்ளும் அன்பர்களுக்கு… இந்த முறை இந்த செய்தியை நீக்குவதாக இல்லை. ப்ளீஸ்… பொறுத்தருள்க!

-ஆர்.எஸ்.அந்தணன்

4 Comments
  1. Ghazali says

    நல்ல விசயத்தை, நல்ல விதமாக, நல்ல மக்களுக்குப் போய்ச்சேரும் விதமாகச் சொல்வதில் தவறேதும் இல்லை.
    இது மேலும் பல (அட்லீஸ்ட் சில) வசதி படைத்த உள்ளங்களை உதவி செய்யத் தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்கும்.
    அஜீத் பற்றி நிறைய நல்ல செய்திகள் கேள்விப்படுகிறோம் (ஊட்டியில் படக்குழுவினருக்கு ஸ்வெட்டர் வாங்கி சர்ப்ரைசாகக் கொடுத்தது உட்பட!). அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்!

  2. வாசகன் says

    இப்படியும் ஒரு பப்ளிசிட்டி..!
    அந்தணா, இது உனக்குத் தேவையா?

    இடது கை வலது கைக்குத் தெரியாம உதவுவது என்று அஜித் உறுதியாக இருக்க, உதவி பெறுபவரின் கூச்சத்தையும் புரிந்து கொள்ளாமல் சொறிந்து விடுவது எதற்காக?

    உனக்கு அஜித்தின் மேல் (கட்டிங்) அளவு கடந்த பாசம் இருக்கலாம். ஆனால் இங்கிதம் தெரியாமல் நடந்து கொள்ளலாமா?

  3. aforapple says

    Thala naa thala thaaaan…… unmaiyaana nalla manithar ajithiru pirandhanaal nal vazhthukkal…

  4. Shankar says

    Real Hero Ajith…

Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
ஹ்ம்ம்… துபாய்ல இப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்க!

‘திருந்துடா காதல் திருடா ’ என்றொரு படம் வரப்போகிறது தமிழில். நியாயமாக திருந்துடாவை ‘திருந்துங்கடா ’ என்று வைத்திருக்க வேண்டும் போல. அந்தளவுக்கு இருக்கிறது படத்தின் ஒன்...

Close