அஜீத்தை கவிழ்க்க அத்தனைக் கூட்டம்!

0

பிரபல வார இதழில் வந்திருக்கும் இந்த செய்திக்கு இன்னும் துடிதுடிப்பு ஜாஸ்தி. அது இதுதான். ‘அஜீத்தின் அடுத்தப்படம் சதுரங்க வேட்டை வினோத்துக்கு’.

சரியான தேர்வு. சரியான முடிவு…. என்று இந்நேரம் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள் அஜீத்தின் ரசிகர்கள். சதுரங்க வேட்டை மட்டுமல்ல, தீரன் அதிகாரம் ஒன்று படமும் வினோத்தின் ஸ்கிரிப்ட் தேடலுக்கும் உழைப்புக்குமான சரியான சர்டிபிகேட் ஆச்சே?

‘விஸ்வாசம்’ படத்தை முடித்துவிட்டு அஜீத் நடிக்கப் போகும் படம் இதுதான் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடுவில் பிரபுதேவாவுக்கும் ஒரு கமிட்மென்ட் கொடுத்திருக்கிறார் அஜீத். அது எப்போது என்று தெரியவில்லை. இதற்கிடையில் அடைந்தால் மகாதேவி, இல்லையேல் சும்மாவே இருப்பேன் என்று வெறும் கழுத்தோடு திரிந்து கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.

மெல்ல நல்ல ஸ்கிரிப்ட்டுகளின் பக்கம் நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிற அஜீத்தை, விஷ்ணுவர்த்தன் படம் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடும் என்பது ரெகுலர் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். அவர்களுக்கு தெரிந்தளவு, அஜீத்திற்கும் தெரிந்திருக்கிறது போலும். இல்லையென்றால், எதற்காக இத்தனை இடைச்செறுகல்?

எதுக்கும் வேற திண்ணையை பாருங்க விஷ்ணு!

Leave A Reply

Your email address will not be published.