உதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்?

1

ஏகலைவன் என்றொரு நபர் தொடர்ந்து அஜீத்திடம் கதை சொல்வதற்காக துரத்திக் கொண்டிருக்கிறார். ஒருமுறை மறுத்தால் ‘சரிங்க’ என்று ஒதுங்கிக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படுகிற கதிதான் ஏகலைவனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 58 வீடியோக்களில் பேசி அதை யு ட்யூபில் வெளியிட்டு வந்த ஏகலைவன் அதில் சொல்லியிருக்கும் விஷயங்கள் எல்லாம் அஜீத் தரப்பை மேலும் மேலும் எரிச்சலைடைய வைத்ததால் வந்த வினையை சில தினங்களுக்கு முன் அனுபவித்துவிட்டார் அவர்.

கோடம்பாக்கத்தில் இன்று அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் இயக்குனர்களின் லிஸ்ட்டை கவனித்தால், அதில் மணிரத்னம் தவிர மற்றவர்கள் எல்லாருமே இருப்பார்கள். அப்படியிருக்க… எங்கோ இருக்கிற ஏகலைவனுக்கு படம் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் அஜீத்திற்கு இல்லவே இல்லை. அப்படியிருக்க… என் கதையை கேளுங்க என்று ஊரை கூட்டி ஒப்பாரி வைத்து வரும் அவரை அஜீத் வெறுக்காமலிருந்தால்தான் ஆச்சர்யம்.

அவரும் தல… தல… என்று அனுகூல சத்துருவாகவே மாறி அன்றாடம் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த வாரம் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திடீரென ஏகலைவன் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரிகள், “இனி ஒரு முறை அஜீத் பற்றி வீடியோ போடறதோ அல்லது அவருக்கு கதை சொல்லப் போறேன்னு கிளம்பறதோ கூடாது” என்று எச்சரித்திருக்கிறார்கள்.

இதை தன் வாயாலேயே அஜீத் ரசிகர்களுக்கு 59 வது வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ஏகலைவன். தன் மனைவியையும், மகளையும் போலீஸ் அதிகாரி ஒருவர் விரல் நீட்டி எச்சரித்ததாகவும் குறிப்பிடுகிறார் அவர். அஜீத் குழந்தை தடுக்கி விழுந்தால் கூட அதற்கு நீதான் காரணம் என்று உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டினாராம் அந்த அதிகாரி. இதையடுத்து ‘இனிமேல் அஜீத்திற்கு கதை சொல்லும் முயற்சியில் ஈடுபட மாட்டேன்’ என்றும் கூறிவிட்டார். ஏகலைவனின் சாமர்த்தியமே இங்குதான் வெளிப்படுகிறது.

ஏதோ அஜீத்திற்கே தெரியாமல் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியது போலவும், அஜீத்திற்கு தெரிந்தால் என்னாகும் தெரியுமா? என்றும் கூறி சாமர்த்தியமாக அஜீத் ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்கிற அந்த தந்திரம்தான் அஜீத்திற்கு இவரை பிடிக்காமல் போக முதல் காரணமாக இருந்திருக்கும். இப்பவும் அந்த யுக்தியை மிக சரியாக செய்திருக்கிறார் ஏகலைவன்.

அஜீத்தின் கவனத்திற்கு தெரியாமல் இப்படியொரு மிரட்டல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. தனக்கு மன உளைச்சல் கொடுக்கிற நபரை நேரில் அழைத்து, “தம்பி… உனக்கு நான் படம் பண்ற எண்ணமே இல்ல. இனிமே நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் வேறு வேலை இருந்தால் பார்” என்று ஒரு வார்த்தையில் இந்த பிரச்சனையை முடித்திருக்க வேண்டிய அஜீத், போலீஸ் வரைக்கும் போனது நியாயமும் இல்லை. அதற்காக ஏகலைவனின் தந்திரமும் ஏற்புடையதாக இல்லை.

இந்த விஷயத்தில் அஜீத் ரசிகர்கள்தான் ஐயோ பாவம். யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்கிற குழப்பத்திலிருக்கிறார்கள்.

செல்லாத 500 ரூபாயை விட, செல்லுகிற ஐம்பது பைசா மேல். புரியுதா ரசிகர்ஸ்?

1 Comment
  1. JOSEPH VIJAY says

    Ajith is always selfish gay.

Leave A Reply

Your email address will not be published.