பிடிக்கல… இடத்தை மாத்துங்க! அஜீத் மறுப்பால் அதிர்ச்சி!

0

‘விவேகம்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அவரது ரசிகர்களின் நாடி நரம்புகளுக்குள் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு புது ரத்தம்! அது வி. பாசிட்டிவ் ரத்தம்! சர்வைவா என்ற ஒரு பாடலுக்கு அவரது ரசிகர்கள் தந்த வரவேற்பு இதுவரை இன்டஸ்ட்ரி அறியாதது. இப்படி அஜீத் தும்மினால் கூட, அதையும் பாலாபிஷேகம் என்று வர்ணிக்கும் வெறிபிடித்த ரசிகர்களுக்கு இந்த தகவல் என்ன மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்துமோ? பட்… நமக்கென்ன? சொல்ல வேண்டியதை நாட்டு மக்களுக்கு சொல்லித் தீருவோம்ல?

கடந்த சில வருஷங்களாகவே அஜீத்தின் பாராமுக லிஸ்ட்டில் இருக்கிறது தமிழ்நாடு. “கதை வெளிநாட்டில் நடந்தா தேவலாம். உள்ளூர்ல ஷுட்டிங் வைக்க வேணாம் பாருங்க…” என்று விபரம் சொல்லியே கதை கேட்கிற அளவுக்கு உள் நாட்டு உவர்ப்பு சற்று ஓவராகவே இருக்கிறது அவருக்கு. இந்த நேரத்தில்தான் பல்கேரியாவில் எடுக்கப்பட்ட விவேகம் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணியை இங்கு சென்னையில் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் டைரக்டர் சிவா.

அந்த வேலைகளில் ஒன்று டப்பிங். ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்து வரும் டப்பிங் பணிகள் ஓரளவுக்கு முடிந்தது. இன்னும் பேச வேண்டியவர் அஜீத் மட்டுமே. வழக்கமாக இங்கு வந்து டப்பிங் பேசிவிட்டு செல்லும் அவர், “இந்த முறை ஏ.வி.எம் வேணாம். எல்லாத்தையும் அள்ளிகிட்டு ஐதராபாத் போயிருங்க. நான் அங்கு வந்து பேசுறேன்” என்று கூறிவிட்டாராம். இதில் படு பயங்கர அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் அனைவரும்.

முக்கியமாக அஜீத் வந்தால் அவருடன் நின்று போட்டோ எடுக்கலாம் என்று காத்திருக்கும் சில திரைப்பட தொழிலாளிகள், “ஐயே… வரமாட்டாரா அவரு?” என்று பேஜாராகிறார்கள்.

உங்க தொல்லைக்கு அஞ்சிதானேய்யா அவரு வெளி மாநிலத்துக்கே ஓட்றாரு?

Leave A Reply

Your email address will not be published.