அடப்பாவமே… இப்படியா பண்ணுவீங்க?

0

அஜீத் ரசிகர்களை விஜய் ரசிகர்களும், விஜய் ரசிகர்களை அஜீத் ரசிகர்களும் மாறி மாறி வாரிக் கொள்வதை சகிக்க முடியாமல்தான் ட்விட்டர் என்கிற தேர் உருண்டு புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அவனே…இவனே… பேயே… பிசாசே… என்று ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து திட்டிக் கொண்டிருந்த இரண்டு பேருடைய ரசிகர்களுக்கும் இந்த ஒரு போட்டோ பேரதிர்ச்சியை கொடுத்திருக்கும். இந்த படு பாதக செயலை செய்த அந்த மாபாவியின் ட்விட்டர் அட்ரஸ் நமக்கெதற்கு? ஆனால் ஆள் சுவாரஸ்யப் பேர்வழியாக இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொன்றுவிட்டு தப்பி ஓடினானே ராம்குமார். அவன் தலையை தனியே எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு அதில் அஜீத் மற்றும் விஜய் தலையை பொருத்திவிட்டார் அந்த ரசிகர். ‘அஜீத் – விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டோட சாபக்கேடுனு ஏன் சொன்னோம்னு இப்ப புரியுதா?’ என்ற கேள்வியோடு இந்த போட்டோஷாப் வேலையை செய்திருக்கிறார் அவர். (இவர் யாருடைய ரசிகரோ?)

இந்த புகைப்படம் வெளியாகி கொஞ்ச நேரத்தில், சம்பந்தப்பட்ட படைப்பாளியின் (?) முந்தைய பத்து தலைமுறையை இழுத்து வச்சு சிரஞ்ச்சை செலுத்திவிட்டார்கள் அஜீத் விஜய் ரசிகர்கள். தலைவனை கேலி செய்த ஒருவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் தண்டனை, குற்றவாளி ராம்குமாருக்கு கொடுக்கப் போகும் தண்டனையை விட பெரிசா இருந்தால் என்னதான் செய்வது?

Leave A Reply

Your email address will not be published.