அஜீத் விஜய்யின் ஆண்டவன் சென்ட்டிமென்ட்! இன்றைய நிலவரம் இது!

0

கடன் வாங்கியாவது திருப்பதி உண்டியலில் காணிக்கை போட்டுவிடுவது அஜீத்தின் வருஷா வருஷ வழக்கம்! முன்பெல்லாம் கால்நடையாகவே சென்னையிலிருந்து திருப்பதிக்கு நடந்திருக்கிறார் அஜீத். தனது நடிப்பில் ஒவ்வொரு படங்கள் முடியும்போதும் திருப்பதிக்கு செல்லும் வழக்கமுடைய அஜீத், ஐதரபாத்தில் விவேகம் டப்பிங்கை முடித்த கையோடு இன்று காலை திருப்பதிக்கு வந்திறங்கினார்.

அஜீத் வந்திருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் அவருடன் கைகுலுக்கியும் போட்டோ எடுத்தும் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டவன் சென்ட்டிமென்ட்டை அந்த ஆண்டவனே நினைச்சாலும் தடுக்க முடியாத வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இவர், விவேகம் ரிலீசுக்குப் பின்பும் ஒரு முறை சென்று பெருமாளை சேவிப்பார் என்பது நிச்சயம்.

இவர் இப்படி என்றால், விஜய்க்கு சென்ட்டிமென்ட் வேளாங்கண்ணி. ஒவ்வொரு முறையும் இவரது படங்கள் வெளியாவதற்கு முன் வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய். பல முறை நள்ளிரவு திருப்பலிகளில் உள்ளம் உருக நிற்கும் விஜய்யை கண்டு உள்ளம் உருகிய குடும்பங்கள் ஏராளம்.

சினிமாவும் வாழ வைக்குது, சென்ட்டிமென்ட்டும் வாழ வைக்குது!

Leave A Reply

Your email address will not be published.