அஜீத்திற்கு விஷால் சவுக்கு! ஆரம்பித்தது திரைமறைவு மோதல்!

நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட்டில் அஜீத் மற்றும் சிம்பு இருவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வரும் செய்திகளையும், அது தொடர்பான விவாதங்களையும் கருத்தில் கொண்டுதான் இது வெளியிடப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக உணர முடிகிறது. நடிகர் சங்கமே தனக்கு ஆதரவான சிலரது உதவியுடன் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது அதிலிருக்கும் விஷயங்கள்.

இதோ அந்த பதிவு- 

நடிகர் சங்கமும், நட்சத்திர கிரிகெட்டும்
வணக்கம்:

ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம்POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இத நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொது குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலை துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களை முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே. நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்ட படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்?நடிகர் நடிகைகள் பிச்சைகாரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குகூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை.

ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.அவர்களை வருந்த செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்.. அவர்களுக்கு அடுத்தவர்களை குறை குறைவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள் சொல்லுமாறு நடிகர் சங்க கட்டிடம் நடிகர்களின் சொந்த செலவில் கட்டப்படவேண்டும் மக்களை சுரண்ட கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்? அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்ட பட கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியது தானே?

இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்று தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாட்டுவார்களோ? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்தபடியே தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்? சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது திரை குடும்ப தேவைகளை சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிகெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல. என்பதை அறியவேண்டும்.

விவாதம் செய்யும் நடிகர்கள்  ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும் முதலில்அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

9 Comments
  1. பச்சை says

    நலிந்த நாடககலைஞர்கள், நலிந்த நாடககலைஞர்கள் என வார்த்தைக்கு வார்த்தை வருகிறதே. அந்த கிரிக்கெட் அணிகளில் எத்தனை நலிந்த நாடககலைஞர்கள் இருக்குறார்கள் என்பதை விஷால் தெளிவுபடுத்தவேண்டும்.

    1. Pandiyan says

      Oora kolla adikiradu ithuthan

  2. Malarvannan says

    நடிகர் சங்கத்துக்கு வந்து உதவி பெற்றுச் செல்லும் பல நலிந்த வயதான கலைஞர்களை பார்க்கும் போது இவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்த மனம் நெகிழ்கிறது

  3. Roja says

    Nalintha nadaga nadigar ellam 60 vayathukku mel. Older than 60years.

  4. விவேக் காயாமொழி says

    இவனுக்கு அரசியல் அரிப்பு எடுத்துவிட்டது.விஜய் அடித்து விரட்டிய ஜெயசீலனை தேடிப்பிடித்து மேனேஜர் ஆக்க, அவன் முதலில் விஜையை டார்கட் செய்து ஒரே நாளில் படம் ரிலீஸ் என்று ஓசி யில் விளம்பரம் தேடினான்.அது வேலைக்காகாததால் இப்போது அஜித் க்கு வந்துள்ளனர். திமிரு படத்துக்கு அடுத்து ஓடிய ஒரே படம் பாண்டியநாடு..மார்க்கெட் வேல்யூ பூச்சியம்.இந்த அழகில் நடிகர் சங்க காமெடி வேறு…
    நாடக நடிகனையெல்லாம் கூப்பிட்டா கிரிக்கெட் விளையாட போகிறாய்?
    நீ tv யில் வரவேண்டும். அதற்கு இத்தகைய சாக்கு. அஜித்க்கு அப்போதைய ஆளும் கட்சியோடு பிரச்சினை வந்த போது சங்கம் மயிரா பிடுங்கியது? இல்லை இவனெல்லாம் வெளியே வந்து பேசினானா? விஜயகாந்த் அழைத்த போதே சொல்லி வராமல் தன்னால் முடிந்ததை சங்க கடனை அடைக்க கொடுத்தவர்.(இது சரத்குமார் சொன்னது)..இப்பவும் பணம் கொடுப்பார்..ஓட்டு போடவே வரல, இதுக்கா வருவார்?

    1. roja says

      யாரையும் மட்டமாமா பேசந்திங்கோ. நல்லதுக்கு காலம் இல்லை .தான் உண்டு தன் காசு என்று எல்லார்ரும் இருக்கலாம்.
      செயல் படுத்துறது தான் கஷ்ட்டம் தடைகள் வரத்தான் செய்யும் .

      சரத்குமார் தலைமையிலான நிர்வாகிகள் நடிகர் சங்கத்தை அடகு வைக்க முயன்ற போது,தொடர்ச்சியான சட்டப்போராட்டங்கள் முறையான கொள்கை விளக்கக் கூட்டங்கள், தொடர்ந்து அவர்களுக்குக் கிடைத்த வெற்றி.
      30 கோடி சம்பளம் வாங்கும் நடிகன், 300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடமிருந்து பணம் வாங்கக் கூடாது என்பது அந்தச்செய்தியின் சாரம்சம். அப்படி உண்மையிலேயே அந்த நடிகர் அறிக்கைவிட்டிருந்தால், அப்பொழுது எதுக்கு ஐயா உங்கள் படத்திற்கு அந்த 300 ரூபாய் சம்பாதிக்கும் நடிகன் டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு வரவேண்டும், நீங்கள் வாங்கும் சம்பளம் அந்த 300 ரூபாய் சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கான ரசிகனின் பணம் தானே என்கிற கேள்வி அவர் முன்வைக்கப்படும் என்பது அவருக்குத் தெரியும்.

  5. விவேக் காயாமொழி says

    அவர்கள் சொல்கின்றனரோ இல்லை நீங்கள் தூண்டி விடுகிறீர்களோ.!!
    இதெல்லாம் ஒரு செய்தி…

  6. Vijay says

    Vishal .. ne solrathu than correct.. ajith sarathkumar and shimbu ku support panran… விஜயகாந்த் அழைத்த போதே சொல்லி வராமல் தன்னால் முடிந்ததை சங்க கடனை அடைக்க கொடுத்தவர்.(இது சரத்குமார் சொன்னது)..intha sentence ah padikumpothu purithu.. Sarathkumar kattamudiyatha building ah ne kattiduvanu payathula intha ajith payan echaya thondiciturukan..

    Nalintha kalaingar vilayadavarala… pakka varanga so avanga vangura ticket kasu sangam ku poguthu da puriyatha madayangala

  7. babu says

    கட்டாயமாக விஷால் சொல்வது உண்மை தான். ஆனால் அவர்கள் படம் நடித்து தானே கட்டிடம் கட்டுவதாக தானே சொன்னார்கள். இப்பொழுது எதற்காக IPL நடைபடும் பொழுது கிரிக்கெட் விளையாடுகிறார்கள் , சற்றே சிந்திக்க வேண்டுகிறேன். மக்களே ஏமாற்ற வேண்டும் என்பதற்காவே. நலிந்த கலைஞர்களை உதவி செய்ய நினைக்கிற நீங்கள் ஏன் மக்களுக்காக உதவி செய்ய நினைக்கவில்லை. என்ன செய்திர்கள் நீங்கள் மக்களுக்காக…….. அனைத்து நடிகர்களுக்கும் தான் இந்த கேள்வி….
    #Boycottstarcricket…….

Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
குமுதம் டூ கொத்து பரோட்டா! இவர் விருது நகரின் வீச்சு பரோட்டா!

தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார்...

Close