பெருந்தலைகளையும் கவிழ்த்து விடும் நடிகைகளின் பாலிடிக்ஸ்?

0

பெரிய ஹீரோக்களை வளைப்பதற்காக ஹீரோயின்கள் முட்டி மோதுகிற விஷயம் இருக்கிறதே… அது காளை ஃபைட், சேவல் ஃபைட்டுகளையும் விஞ்சியது! அநேகமாக தென்னக மொழி ஹீரோயின்கள் அத்தனை பேரும் இந்த கோழி ஃபைட்டில் மூக்கை நுழைத்து கொத்துப்பட்டு கிடப்பதெல்லாம் சர்வ சாதாரணம். ஒரே ஹீரோவை ஆளாளுக்கு ரவுண்டு கட்டினால் அவர்தான் என்ன செய்வார்? இருந்தாலும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்சினிமாவில் டாப் லெவலில் இருக்கிற ஐந்து ஹீரோக்களை வளைப்பதில் இவர்கள் காட்டுகிற வேகம் ஹுட் ஹுட் புயலை விடவும் கொடூரமானதாக இருப்பதாக கூறுகிறார்கள் இன்டஸ்ட்ரியில். ஒரு படம் முடிந்து அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிய அடுத்த வினாடியே எப்படிதான் தகவல் போகிறதோ? சம்பந்தப்பட்ட ஹீரோவுக்கோ, அவர்களது மேனேஜர்களுக்கோ போன் செய்து, ‘நான் கொஞ்சம் பேசணுமே’ என்கிறார்களாம் கொஞ்சலும் கெஞ்சலுமாக. ‘ஹீரோயின் விஷயத்தில் நான் தலையிடறதில்ல. அது முழுக்க முழுக்க இயக்குனரோட சுதந்திரம்’ என்று பிரஸ்சிடம் (மட்டும்) பம்மாத்து காட்டும் அத்தனை ஹீரோக்களும், இந்த அழைப்பில் கரைந்து காணாமல் போய்விடுவதுதான் கொடுமை.

சமீபத்தில்தான் இப்படி தன்னை நச்சரித்த காஜல் அகர்வாலை தனது புதிய படத்தில் ஹீரோயினாக புக் பண்ண உத்தரவிட்டிருக்கிறார் தனுஷ்.

ஏகபத்தினி விரதனாக இருக்கும் அஜீத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த அழைப்பு. கவுதம் மேனன் படம் முடிந்தவுடன் அஜீத் அடுத்து நடிக்கவிருப்பது சிறுத்தை சிவா இயக்கத்தில். அந்த படத்திற்கு இன்னும் தயாரிப்பாளர் கூட முடிவாகவில்லை. அதற்குள், அஜீத்தையும், சிவாவையும் கன்வின்ஸ் செய்துவிட்டாராம் ஹன்சிகா. தெலுங்கு தமிழ் இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் ஹன்சிகா, இப்படி விரட்டி விரட்டி வாய்ப்பு கேட்பார் என்று சிவாவும் நினைத்திருக்க மாட்டார், அஜீத்தும் நினைத்திருக்க மாட்டார்.

எப்படியோ…! நீங்கதான் ஹீரோயின் என்று இப்போதைக்கு சொல்லி வைத்திருக்கிறார்களாம் இருவரும்!

Leave A Reply

Your email address will not be published.