கொண்டைய மறைங்க அஜீத்!

3

தன் ‘போட்டோ ஷாப்’ ரசிகர்களால் எப்போதும் கர்ணன் ஆகிக் கொண்டிருக்கிறார் அஜீத். சென்னை வெள்ளத்தின் போதும் சரி, கேரளாவில் வெள்ளம் வந்த நேரத்திலும் சரி, ‘அள்ளிக் கொடுத்தார் அஜீத்’ என்று போட்டோ ஷாப்பில் பொய் பரப்புவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். பல நேரங்களில் பொய்யின் வேகம், உண்மையின் உச்சந்தலையில் உட்கார்ந்து கொண்டு அதை அமுக்கும். அஜீத் விஷயத்திலும் அதுவே நடந்தது. நடந்தும் வருகிறது. பேரிடர் நேரங்களில் தன் பாக்கெட்டை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அஜீத், அரசாங்கம்னு ஒண்ணு எதுக்கு இருக்கு? நாம எதற்கு தரணும்? என்று கேட்பதாகவும் தகவல்.

ரஜினி தொடங்கி தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் தங்களால் ஆன நிதியுதவியை கொடுத்து வருகிறார்கள். விஜய் கூட தன் அக்கவுன்ட்டிலிருந்து ரூபாய் 70 லட்சத்தை கேரளாவிலிருக்கும் தன் ரசிகர் மன்றங்களுக்கு ஆன் லைன் டிரான்ஸ்பர் செய்திருக்கிறார். வழக்கம் போல பாக்கெட்டை திறக்காதவர் அஜீத் மட்டுமே.

சோஷியல் மீடியாவில் என்னப்பா… உங்க தல என்ன செஞ்சாரு? விஜய் ரசிகர்கள் நக்கல் அடித்து வரும் நேரத்தில், அஜீத் செய்திருக்கும் காரியம்… செம ட்விஸ்ட். எந்நேரமும் இதை பற்றியே விவாதிக்கும் ஊடகங்களையும், சோஷியல் மீடியாவையும் தன் விஸ்வாசம் படம் பற்றி பேச வைத்துவிட்டால் போதுமே?

இன்று அதிகாலை 3.40 க்கு விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. (அதென்ன ஆந்தை கொட்டாவி விட்ற நேரத்தில்?) ஊரே அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. அப்ப கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய உதவி?

அதான் விஸ்வாசம் போஸ்டரை விட்டு மறைச்சுட்டோம்ல? இவ்வாறு அஜீத் நினைத்தாலும், கொண்டை போல துருத்திக் கொண்டிருக்கிறது நிஜம்.

நீங்கள்லாம்தான் தமிழ்நாட்டை ஆளணும் அஜீத். அதற்கு முழு தகுதியும் வந்தாச்சு!

3 Comments
 1. Pandiyan says

  Ajith is a Selfish Actor in Tamil Cinema Industry.
  We should avoid his forthcoming films.

 2. Senthil says

  Vijay perukavathu 70 lakhs kosutharu. Ajit oru mayirum pudungala, let us boycott his movies

  1. Priya says

   But everyone know that your going to watch the movie first before even his fans watch

Leave A Reply

Your email address will not be published.