ஆர்.கே.நகர் எலக்ஷனுக்கே ஆள் போதல! இதில் நீங்க வேறயா சந்தானம்?

0

கங்காருக்கு பை இருக்கேன்னு காண்டா மிருகம் களத்துல இறங்குன மாதிரியாகிவிட்டது சந்தானத்தின் ஸ்கெட்ச்! வெறும் காமடியன் ஆக இருந்தபோது அவரை ரசித்து மகிழ்ந்த சினிமா ரசிகர்கள், எந்த நேரத்தில் ஹீரோ ஆனாரோ? அந்த நேரத்திலிருந்தே அவரை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பலனை கடந்த சில படங்களில் அனுபவித்தவர், இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவிருக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’வில் இன்னும் கண் கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

தியேட்டர் பிடிப்பதில் ஆரம்பித்த சிக்கல், இப்போது முன் பதிவில் வந்து முக்கி நிற்கிறது. நேற்றே ஓப்பன் செய்யப்பட்ட முன் பதிவு, நேரத்துக்கு நேரம் கிலி ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறதாம் சந்தானத்திற்கு. பல தியேட்டர்களில் ஒரு வரிசை கூட புக் ஆகவில்லை. அதைவிட பெரும் கொடுமை இதுதான். புக் மை ஷோ டாப் மூவிஸ் லிஸ்ட்டில் முதல் பத்து இடங்களில் கூட சக்கப்போடு போடு ராஜா இல்லை.

இதனால் படு அப்செட் ஆன சந்தானம், கூலிக்கு ஆள் பிடித்தாவது தியேட்டரை புல் ஆக்கும் வேலைகளில் ஈடுபட எத்தனித்து வருகிறாராம்.

அதுவும் சிக்கல்தான் இன்றைய தேதிக்கு. ஏன்? ஆர்.கே.நகர் எலக்ஷன் முடியற வரைக்கும் ஆட்களுக்கு மட்டுமல்ல, ஆடு கோழிகளுக்கு அநியாய பஞ்சம் பாஸ்!

Leave A Reply

Your email address will not be published.