அஜீத் படத்தையே இயக்கிட்டாரு! அதனால்தான் வாய்ப்பு தந்தோம்! அறிமுக நடிகர் சர்டிபிகேட்!

0

சமீபத்தில் திரைக்கு வந்து பலரையும் கவனிக்க வைத்த படம் ‘ஒரு முகத்திரை’. இதில் ரகுமான் மனநல மருத்துவராகவும், சுரேஷ் என்ற புது முகம் அவரது பேஷன்ட்டாக நடித்திருந்தார்கள். பெரிய படங்களுக்கு இணையாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், பாக்கெட்டுக்கு பங்கம் வைக்கவில்லை என்பதுதான் முதல் தகவல் அறிக்கை. (கடைசி தகவல் அறிக்கையும் அதுதான்)

இந்த சுரேஷ் மலேசியாவில் வெளியாகும் தமிழ் மற்றும் இந்திப்படங்களின் விநியோகஸ்தர். பெரிய நிறுவனமாக இருந்தாலும் முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பதைவிட, மக்களின் மனங்களை கவர்வதுதான் என் லட்சியம் என்று கிளம்பி வந்துவிட்டார். இவரது அடுத்த படத்தை இயக்கப் போகிறவர்தான் விசேஷமானவர். அஜீத்தை வைத்து ‘ஆழ்வார்’ என்ற படத்தை இயக்கினாரல்லவா? அந்த இயக்குனர்தான். பெயர் செல்லா!

நிறைய பேரிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தோம். அப்ப நான்தான் ஆழ்வார் பட இயக்குனர் என்று இவர் வந்தார். அஜீத்தையே இயக்கியவர். அப்படின்னா வெயிட்டாதான் இருக்கும் என்று நம்பி கதை கேட்டோம். சூப்பரா இருந்திச்சு. உடனே அடுத்த கட்ட வேலைகளில் இறங்கிட்டோம் என்றார் சுரேஷ்.

சுரேஷுக்கு ஜோடியா ஹன்சிகா மோத்வானி, தமன்னான்னு பலரையும் யோசிச்சோம். ஆனால் எனக்கு பொருத்தமா தெரிஞ்சவர் ரெஜினாதான். அவரும் சரின்னு சொல்லிட்டார் என்கிறார் செல்லா.

ஆடியோ ரிலீசுக்கு அஜீத்தை கூப்பிடலாம்னு இருக்கோம் என்று சுரேஷ் சொன்னதை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

அப்படியே எடுத்துகிட்டாலும்….?

Leave A Reply

Your email address will not be published.