ரஜினிகாந்த்? அமீர், சேரனுக்கு சீமான் சாட்டை!

3

வழவழா கொழகொழா பதில்களை ஒருபோதும் விரும்புவதில்லை சீமான்! இந்த வார குமுதத்தில் சீமான் பொங்கியிருப்பது பற்றி அமீரும் சேரனும் என்ன பேசினார்களோ? ஆனால் ஒருகாலத்தில் சீமானுடன் சிறை சென்றவர் அமீர். அவர்களை சிறையில் சென்று சந்தித்துவிட்டு வந்தவர் சேரன். ஒரு ரஜினி விஷயத்தில் மூவருமே மூன்று திசைகளில் இருக்கிறார்கள். சரி… சீமானின் பதிலை படிப்போம்.

கேள்வி இதுதான். வேற்றுமொழி நடிகர்கள் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்கள் கிள்ளிக் கூட கொடுக்கவில்லையே?

அல்லு அரவிந்த் 25 லட்சம் கொடுக்கிறார். இங்க இருக்கும் ரஜினிகாந்த் பத்து லட்சம் கொடுக்கிறார். அவரைதான் உங்களை விட்டா எங்களுக்கு நாதியில்லேன்னு அமீரும் சேரனும் தலைமை தாங்க கூப்பிடுகிறார்கள். உலகமே மனித நேயம்தான் பேசியது. தமிழன்தான் உயிர் நேயம் பேசினான்.

இவ்வாறு பதிலளித்திருக்கிறார் சீமான்.

3 Comments
  1. Guna says

    Seeman evllavu koduthan

  2. sandy says

    அட ராமா இந்த சைமான் ஏன் அரசியலையும் சினிமாவையும் போட்டு குழப்புறாரு…

  3. Sheela Rufus says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே

Leave A Reply

Your email address will not be published.