இளையராஜா பெயரில் அதிமுக வினரை குழப்பிய அம்மா அஞ்சலி பாட்டு! நிஜ கலைஞர்கள் இதோ!

0

இன்று காலையில் இருந்தே, இதயம் கனத்துப் போகிற மாதிரியான ஒரு அற்புதமான பாடல்… அதுவும் இளையராஜாவின் குரலில்! அம்மா அம்மா… என்று ஆரம்பித்து தமிழகத்தின் துணிச்சல் தலைவி ஜெ.வின் புகழ் பாடும் அந்த பாடலை இசையமைத்து பாடியவர் இளையராஜாதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது ஜனங்களின் மனசு. ஆனால் இளையராஜா தரப்பிடமிருந்து இந்த பாடல் தொடர்பான எவ்வித அறிவிப்பும் வராத நிலையில், இன்னொரு தகவல் வந்தது.

ராணி என்ற படத்திற்காக இளையராஜா போட்ட பாடலைதான், அம்மா அஞ்சலி பாட்டு என்று கதை கட்டிவிட்டார்கள் என்று. ஆனால் அதுவும் பொய் என்பது அதற்கப்புறம்தான் தெரிந்தது. இந்த அற்புதமான பாடலுக்கு சொந்தமான கலைஞர்கள், பாடலாசிரியர் அஸ்மினும், இசையமைப்பாளர் வர்ஷனும்.

‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ என்ற பாடலின் மூலம் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனியால் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அஸ்மின். புறம்போக்கு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் வர்ஷன். இவ்விருவரின் படைப்புதான் இந்த அம்மா அஞ்சலி பாட்டு!

ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஜெ.வின் பரம எதிரிகளான திமுக காரர்களாக இருந்தால் கூட கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரும்.

பாராட்டுகள் அஸ்மின், வர்ஷன்…

 

 

Leave A Reply

Your email address will not be published.