அதிமுக அம்மா கட்சி! எமிஜாக்சன் முடிவால் ஷங்கர் எரிச்சல்?

0

‘வீட்ல டாய்லெட் கட்டுங்க’ என்பதை கூட ஒரு நடிகை சொன்னால்தான், வெட்கம் வழிய செங்கல்லை அடுக்க ஆரம்பிக்கிற இந்தியா இது. அதுவும் தமிழ்நாட்டில் நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்படுகிற மரியாதை, பல அரசியல் தலைவர்களை இன்றளவும் ஆட்டம் கொள்ள வைக்கும் அதிசயங்களில் ஒன்று. சி.ஆர்.சரஸ்வதியில் ஆரம்பித்து, பிரச்சாரத்திற்காக விழுந்து விழுந்து தமிழ்கற்றுக் கொள்ளும் நமீதா வரைக்கும் பலருக்கும் தமிழக அரசியல் வா வா என்று வரவேற்பு கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்த நேரத்தில்தான் அந்த படு ஷாக்கான விஷயம் வெளியே கசிந்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுக கட்சி மூன்றாக உடைந்து ஓ.பி., சசிகலா, தீபா அணிகள் ஆகிவிட்டது. இதில் ஜெ.போட்டியிட்ட ஆர்.கே.நகரில் மூன்று கட்சிகளும் மல்லுக்கட்டுவதால், யார் அணிக்கு கூட்டம் என்பதை கண் கூடாக கண்டு களிக்க ஆவல் கொள்கிறார்கள் நாடு முழுவதுமிருக்கிற அதிமுக தொண்டர்கள். கூட்ட விஷயத்தில் சசிகலா அணி வேட்பாளர் தினகரனுக்கு அதிக கூட்டம் சேர்வதில்லை என்று சொல்லப்படுகிறது. (விஜயகாந்தின் தேமுதிகவும் தேர்தலில் நிற்கிறது. வாக்காளர் பின்னால் மூன்றரை பேர் கூட போவதில்லை என்பது இன்னொரு ஷாக்)

ஆனால் பன்னீர் அணிக்கு பயங்கர வவேற்பாம். அவரை காணவும் கை குலுக்கவும் தொண்டர்கள் கடும் ஆர்வம் காட்டுகிறார்களாம். இதை ஒரேயடியாக அடித்து உடைத்து சசிகலா அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால், தங்க சரிகை வைத்த மங்கை மலர் ஏதாவது தென்பட்டால்தான் உண்டு. அந்த வகையில் பலவாறாகவும் யோசித்த வேட்பாளர் தினகரனின் தளபதிகள், மதராசப்பட்டினம், ஐ, எந்திரன் பார்ட் 2 புகழ் எமி ஜாக்சனிடம் பேசினார்கள். பெரும் தொகை ஒன்றை தருவதாகவும் கூறியதால், அந்த இங்கிலாந்து கிளி மெனக்கெட்டு இந்தியா வந்து ஆர்.கே நகரில் பிரச்சாரம் செய்ய தயாராகிவிட்டது.

இந்த தகவல் கசிந்த நிமிஷத்திலிருந்தே கண்களில் கண்ணீர் கசியாத குறையாக கவலைப்பட ஆரம்பித்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். எந்திரன் 2 வெளியாகிற வரைக்கும் அப்படத்தின் இமேஜை குலைப்பது போல எந்த விஷயத்திலும் ஈடுபடாதே என்று பலமுறை வலியுறுத்தியும் எமி கேட்பதாக இல்லை. மற்றதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். இந்த அரசியல் ஆதரவு நிலைப்பாடு ஐயகோ நிலைமைக்கு ஆளாக்குகிறதே என்பதுதான் ஷங்கரின் திடுக் திடுக்!

குல்லாவுக்கு வாக்கு சேகரிக்கிறேன்னு குல்லாவை ஷங்கர் தலையில் போட்றாதேம்மா…

Leave A Reply

Your email address will not be published.