ரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு! இனி 234 தொகுதியிலேயும் வெற்றிதான் போங்க!

2

தினந்தோறும் நடக்கும் காமெடிகளில் ஒன்று, ஆனந்த ராஜின் பிரஸ்மீட்! ‘நமக்கு ஒரு புட்டேஜ் கிடைச்சுது’ என்கிற ஒரே காரணத்திற்காக இவரை ஊக்குவிக்கும் பிரஸ், ‘ஐயா… நீ யாரு? அம்மா ஜெ காலத்துல இப்படியெல்லாம் மீடியாவ தனியா கூப்புட்டு பேசுற அளவுக்கு நீ ஒண்ணும் பில்டப் ராமசாமி இல்லையே?’ என்றெல்லாம் கேட்பதில்லை. தலைமை சொல் கேட்டு புட்டம் வலிக்க ஓடும் சேனல் மற்றும் இணையதள கேமிராமேன்கள்தான் ஐயோ பாவம்.

இப்போதெல்லாம் கேமிராமேன்கள் தன் வீட்டு போர்டிகோவில் மணிக்கணக்கில் காத்திருக்க… சாவகாசமாக கீழே இறங்கி வந்து பேசுகிற அளவுக்கு ‘மெதப்பாகி’விட்டார் அண்ணன். அஞ்சு நிமிஷ புட்டேஜுக்காக எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்கிற லெவலில் நிற்கிற மீடியாவுக்கு, இன்று காலைத் தீனி இதுதான்.

ரஜினியும் ஆனந்தராஜும் மீட் பண்றாங்களாம்.

தனியா விட்டா கவுன்சிலரா கூட ஜெயிக்க முடியாத ஆளுக்காக எதுக்குய்யா இவ்வளவு பேர் கூட்டம் கூட்டமா ஓடுறீங்க? என்று கேட்பதற்கு வக்கில்லாத தேசத்தில், இந்த சந்திப்பை பரபரப்பாக்கவும் சில சேனல்கள் தயாராகிவிட்டன.

உங்களையெல்லாம் பார்த்து எச் ராஜா இல்ல. அவரு வீட்டு அல்சேஷன் கூட வாலை தூக்கிக் கொண்டு சிரிக்கும். வேறு வழி?

பின்குறிப்பு- ரஜினியை சந்தித்த விஷயத்தில், அவரே அசந்து போகிற அளவுக்கு இந்த சந்திப்பை தனக்கான விளம்பரமாக்கிக் கொள்வார் ஆனந்து. ரஜினி எப்படி இதை சகித்துக் கொள்ளப் போகிறாரோ?

2 Comments
 1. Velu says

  Funny, even anandraj meeting kamal would helped him. Selfish rajini will use this meeting to show as if he is still in demand that his new political entry is going to happen. See porampokku s like you writing as is rajini pudungi maari yum, anandrajj keeltharamaananvan maari yum. Stupid move by anandraj to meet selfish rajini.

  1. தமிழ்நேசன் says

   தலைவர் ரஜினி தாண்ட அடுத்த தமிழக முதல்வர்
   சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தனிக்கட்சி காண்பது உறுதி.
   அரியணை ஏறுவது நிச்சயம். ரஜினி, உன்னை போல தமிழ் துரோகிகளை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிப்பார். உன்னை போல அடிமையாக இருக்க மாட்டார். காசு வாங்கி கொண்டு வாக்கை விற்பனை செய்ய மாட்டார். மொத்தத்தில் உன்னை போல அல்லாமல் ஒரு நல்ல குடிமகனாக தமிழனாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்வார். உன்னைய போல பெட்டி வாங்கும் அரசியல் ரஜினிக்கு தெரியாது., ரஜினி தமிழ் நாட்டை ஆளக்கூடாது என்று சொல்ல நீ யாரு ?
   வயித்து எரிச்சல் புடித்தவனே, ரஜினி ஆட்சி தான் இனி தமிழ்நாட்டில். சினிமாவிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார். அரசியலுக்கும் அவர் தான் சூப்பர் முதல்வர்.

Leave A Reply

Your email address will not be published.