அச்சத்தில் ஆழ்ந்த ஆந்திரா சினிமா!

எல்லாம் அந்த ஒரு அழகியால் வந்தது!

0

சுண்டைக்காய்னு நினைச்சா, அது தேங்காவா மாறி தலையில விழுதேய்யா… என்று கலங்கிப் போயிருக்கிறது ஆந்திரா இன்டஸ்ட்ரி. ஸ்ரீரெட்டி என்ற நடிகைக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தவர்கள் வரிசையாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்ம ஊரில் வந்த சுசி லீக்ஸை விட பெரும் கொடுமையாக இருக்கிறது அது. ஒவ்வொரு வீடியோவாக ரிலீஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி. சிலர் மீது வாய் மொழியாக வசவு வேறு. அப்படி சிக்கியவர்களில் ஒருவர் பிரபல ஹீரோ பவன் கல்யாண். பிரச்சனையில் அவரது அம்மாவையும் இழுத்துவிட்டார் ஸ்ரீரெட்டி.

சுமார் நடிகர்களை பற்றி பேசும்போதெல்லாம் சும்மாயிருந்த படவுலகம், பவன் கல்யாண் என்றதும் பற்றிக் கொண்டது. கோபம் ஸ்ரீரெட்டி மீதுதானே வரவேண்டும்? ஆனால் இவர்களின் கோபம், இந்த செய்தியை வெளியிட்ட சேனல்கள் மீது திரும்பிவிட்டது. இனி யாரும் இந்த செய்தி சேனல்களுக்கு பேட்டியோ, விளம்பரமோ தரக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

அப்ப கூட இனி யாரும் ஒழுக்கமா இருக்கணும். நடிக்க வந்த சக நடிகையை தப்பான கண்ணோட்டத்தோடு அணுக கூடாது என்று சொல்லவில்லை. நல்லாயிருக்கு இவங்க நியாயம்?

Leave A Reply

Your email address will not be published.