அனிருத்தா? வேணாம்ப்பா வேணாம்! ஆந்திராவையும் அலறவிட்ட அட்ராசிடி!

0

ஒரு ‘பிராண்ட்’ ஆகிற வரைக்கும்தான் பிக்கல் பிடுங்கல் எல்லாம்! ஆகிவிட்டால், பூனையை யானையாக்கி, புண்ணாக்கை பிரியாணியாக்குகிற வித்தை தானாகவே நடக்க ஆரம்பித்துவிடும். கோடம்பாக்கம் கெட்டுப் போக காரணமாக இருந்த இந்த பார்முலாவால், கோடியாக கோடியாக கொள்ளை அடித்த இசையமைப்பாளர்கள், போடுகிற பாடல்களை மட்டும் சொந்த மண்டையிலிருந்து எடுப்பதில்லை. ஹாரிஸ் ஜெயராஜுக்கு நாலு கோடி சம்பளம் என்று கூசாமல் பில் போடும் நாக்கு, ‘ஒரு படத்தில் வரும் ஐந்து பாடலையும் ஹிட்டாக்க முடியுமா ?’ என்று சவால் விடட்டுமே? நடக்கவே நடக்காது.

மேற்கத்தியை இசையை பெரும் கூச்சலாக்கி, எல்லா ட்யூன்களையும் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் உருவி காசு பண்ணும் இசைமையப்பாளர்கள் வரிசையில் ஹாரிஸ் முதலிடத்திலும், அவருக்கு அடுத்த இடத்தில் அனிருத்தும் இருக்கிறார்கள். இப்போது ஹாரிஸ் லெவலுக்கு சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டாராம் அனிருத். இங்கல்ல… இவரை ராஜ மரியாதையாக வரவழைத்தார்களே ஆந்திராவில். அங்குதான் இந்த அட்ராசிடி.

தற்போது பவன் கல்யாண் படத்தில் இசையமைத்து வரும் அனிருத்தை, அங்குள்ள பல இளம் ஹீரோக்கள் சிபாரிசு செய்கிறார்களாம். இதையடுத்து அவரை அணுகும் தயாரிப்பாளர்களுக்குதான் மூன்றரை கோடி பில் போட்டு கிறுகிறுக்க விடுகிறார் அனிருத். இதற்கு அவர் வொர்த் இல்லை என்று நம்பும் சிலர் மட்டும் எடுக்கிறார்களாம் ஓட்டம்!

போகிற போக்கை பார்த்தால், எல்லாருமாக சேர்ந்து அனிருத்துக்கு பீப் சாங் பாடாமலிருந்தால் அதிசயம்!

Leave A Reply

Your email address will not be published.