அனிருத்துக்கு கால் கட்டு! பொண்ணு யாரு தெரியும்ல?

2

பேஸ் வாய்ஸ் அனிருத்தின் பேக்ரவுண்ட் ஒன்றும் சாதாரணமானதல்ல! சூப்பர் ஸ்டார் ரஜினி இவருக்கு சொந்தக்காரர். அதுமட்டுமா? அனிருத்தை ட்யூன் பண்ணுகிற ட்யூஷன் மாஸ்டரும் கூட! ஆனால் அவ்ளோ பெரிய மனுஷரின் அட்வைசுக்கும் தப்பி, ‘அப்படி இப்படி’ நடந்து கொண்ட அனிருத், கோடம்பாக்கத்தில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் என்ற லிஸ்டில் தொடர்ந்து முதலிடம் பிடித்ததெல்லாம் சேர்க்கை கேடு!

இனியும் விட்டு வைத்தால் கோடம்பாக்கத்தில் வரப்போகும் கோஷ்டி பூசலுக்கு நாமும் ஒரு காரணம் ஆகிவிடுவோம் என்று நினைத்திருக்கலாம். அவசரம் அவசரமாக கால்கட்டு போட முடிவெடுத்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். வெண்ணை வெல்லத்தோடு சேர்வதுதானே டேஸ்ட்? சென்னையிலேயே வெயிட்டான நகைக்கடை ஒன்றின் வாரிசுடன் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார்களாம்.

ஒரு வகையில் அரேன்ஜ்டு மேரேஜ் என்று சொல்லப்பட்டாலும், அனிருத்தும் அவரது வருங்கால மனைவியும் முன்பே அறிமுகமான நல்ல பிரண்ட்ஸ் என்கிறது தகவல்கள். அதுமட்டுமல்ல… அனிருத்தின் லட்சோப லட்சம் ரசிகைகளில் ஒருவராக இருப்பவர்தானாம் இவரும்!

இனி அசட்டுக் கச்சேரிகளை குறைத்துக் கொண்டு, நாட்டுப்பணியே நம் பணி என்று நடப்பார் அனிருத்! ஆக மொத்தம் நிறைய படங்களுக்கு இசையமைப்பார்னு சொல்ல வர்றீங்க, அப்படிதானே?

வர்லாம் வர்லாம் வா!

2 Comments
  1. Ragu says

    சாங்கியதுல அந்த குச்சி கில்லாடிய டெட்டால் போட்டு நல்லா கழுவ சொல்லுங்க

  2. Senthil says

    who’s daughter is that? feel sorry for that family. deep sympathies.

Leave A Reply

Your email address will not be published.