அனிருத் சிபாரிசு? அரை மாங்கா ஹீரோவாகிறது! ஆனால் அதிலேயும் ஒரு மனிதாபிமானம் இருக்காம்…

0

ஜி.வி.பிரகாஷ் ஹிட்டடித்ததிலிருந்து அனிருத் மனசில் ஒரு அன்டர் கவர் ஆபரேஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. “நாமளும் ஹீரோவாகலாமே?” என்பதுதான் அது. கொஞ்சம் கரணம் தப்பியிருந்தால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அனிருத் ஹீரோவாகியிருப்பார். என்னவோ கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் செய்த பூர்வ புண்ணியத்தால், தப்பித்தது தலை.

நழுவியது நழுவட்டும். நல்ல வாய்ப்பு வரும்போது அமுக்கலாம் என்று ஒதுங்கி நிற்கும் அனிருத், தன் நட்பு வட்டாரத்தை சினிமாவுக்குள் இழுத்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு அண்ணனாக ஒரு மொக்கை பீஸ் நடித்திருப்பார் அல்லவா? அவரும் அனிருத்தும் நல்ல நண்பர்களாம். அந்தப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அனிருத்துதான் என்கிறார்கள். இப்போது மீண்டும் அப்படியொரு முயற்சி எடுத்திருக்கிறார் அவர். “இவரை ஹீரோவா போட்டிங்கன்னா, அந்த படத்துக்கு நான் மியூசிக் பண்றேன்” என்று அனிருத் அறிவிக்க, இப்போது மேற்படி மாங்கா பீஸ் முழுநீள ஹீரோவாகிறார்.

இந்த படத்தை ‘மசாலா படம்’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் விவேக்குக்கு பெரிய கேரக்டர் கொடுக்கவிருக்கிறார்களாம். தன் மகனை பறிகொடுத்துவிட்டு ஆறாத துயரத்திலிருக்கும் அவரை மீட்க வேண்டும் என்றால், முதலில் விவேக்கை சினிமா ஷுட்டிங் பக்கம் வரவழைத்தால்தான் உண்டு என்று நினைத்த தயாரிப்பாளர், இந்த படத்தை அவருக்காகவே எடுக்க சம்மதித்திருக்கிறாராம்.

அதற்காகவே இந்த படத்தை வரவேற்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.