அஞ்சலிதான் கண்ணகி! கார்த்திக் சுப்புராஜ் கான்பிடன்ட்?

0

தக்காளிக்கு பெயின்ட் அடிச்சு பப்பாளி ஆக்குற வித்தையெல்லாம் சினிமாவுக்கேயுரிய ஜில்டாப்பு! இங்கு கேரக்டராகவே வாழ்ந்துவிடும் நடிகைகளும் இருக்காங்க. கேரக்டருக்காக சிறிதளவு கூட மெனக்கடாத நடிகைகளும் இருக்காங்க. இதனை இவருக்குதான் கொடுக்கணும் என்கிற கால்குலேஷன் இல்லையென்றால் கேரக்டரும் காலி. சம்பந்தப்பட்ட நடிகையின் உழைப்பும் காலி. இங்குதான் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இறைவி என்ன மாதிரியான படம் என்பதை அப்படத்தின் ட்ரெய்லர் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலியெல்லாம் இருப்பதால் படத்திற்கு ஓப்பனிங் தாறுமாறாக இருக்கும். அது மட்டுமா? கார்த்திக் சுப்புராஜுக்கென தனிப்பட்ட ஆடியன்சும் இருக்கிறார்களே?

இந்த படத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றால் அஞ்சலி எதைதான் தக்க வைத்துக் கொள்ள போகிறார் என்று அவருக்காக கவலைப்படும் ரசிகர்களுக்கு ஒரு முன்னோட்டம். இதில் அஞ்சலியை வாழும் நவீன கால கண்ணகியாக சித்தரித்திருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ். தமிழ்சினிமாவில் கண்ணகியாக நடித்த நடிகைகளுக்கு அதற்கப்புறம் மார்க்கெட் இருந்ததாக வரலாறு இல்லை என்பார்கள் அந்த கால நிருபர்கள். பூம்புகார் படத்தில் விஜயகுமாரி கண்ணகியாக நடித்த பின்புதான் அவருக்கு மார்க்கெட்டில் பொழுது சாய்ந்ததாக பேசுகிறார்கள். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை அஞ்சலிக்கு அந்த பிரச்சனையில்லை. அவர் மார்க்கெட்தான் கோயம்பேடு மார்க்கெட் மாதிரி குப்பையும் கூளமுமாக இருக்கிறதே?

ஒருவேளை இதற்கப்புறம் மார்க்கெட் பிய்த்துக் கொள்ளுமோ என்னவோ?

Vijay Sethupathi, Anjali in Iraivi Tamil Movie Stills

Leave A Reply

Your email address will not be published.