போன ஜென்மத்து காதலை இந்த ஜென்மத்திலும் தொடரும் அஞ்சலி-ஜெய்!

0

காதலியே மனைவியாக கிடைத்துவிட்டால் சொர்க்கம்! அதே காதலி படத்தில் ஜோடியாக நடித்தால் இன்னும் சொர்க்கம்! அதைதான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஜெய். இவருக்கு ஜோடி அஞ்சலி என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமாக்கும்?

பலூன் என்ற படத்தில் இருவரும் ஒண்ணுக்குள் ஒண்ணாகி கண்ணுக்குள் கண்ணாகியிருக்கிறார்கள். ஆவி பில்லி சூனிய பட வரிசையில் வரப்போகும் இப்படத்தின் கதை என்ன?

உதவி இயக்குனர் ஒருவர் கதை எழுதுவதற்காக கொடைக்கானல் போகிறார். அங்கு அவர் தங்குகிற வீட்டில் பல ஜென்மக்களுக்கு முன் ஒரு பலூன் வியாபாரி இருந்திருக்கிறார். அவருடைய ஆவி இவரை என்ன பண்ணுச்சு என்பதுதான் கதை(யாக இருக்க வேண்டும்) “அதற்கு மேல் கேட்காதீங்க. கதை ரிவீல் ஆயிடும்” என்று கதறாத குறையாக தடுப்பணை போட்டுக் கொண்ட அப்படத்தின் இயக்குனர் சிரிஷ் ஸ்ரீதரன், அஞ்சலி ஜெய் காதலிக்கிறார்களா? என்று கேட்டால் கூட அப்பாவியாக நிற்கிறார். படத்தில் வரும் ரகசியத்தையும், படத்தில் நடிப்பவர்களின் ரகசியத்தையும் காக்கிற விஷயத்தில், சிரிஷ் ‘லீக்கர்’ இல்லை. படு உறுதியான லாக்கர்! (அஞ்சலிக்கு துணையா இப்ப அவங்க சித்தி வரப்போறதில்ல. வேற யார் வர்றாங்க? என்ற இன்னொரு கேள்விக்கு கூட மவுனம் காத்தார் சிரிஷ்)

ஷுட்டிங் சமயத்தில் ஜெய்யினால் ஒரு தொல்லையுமில்ல. சொன்ன நேரத்துக்கு வந்து சொன்னபடி நடிச்சுக் கொடுத்தார். மற்ற ஆவிப்படங்களிலிருந்து இந்த படம் வித்தியாசமாக இருக்கும். படத்தை குழந்தைகளோடு பார்க்கலாம் என்றெல்லாம் கிளிஷேவாக அவர் சொல்லி முடித்துவிட்டு வெளியிட்ட ட்ரெய்லரில் ஜெய் பலூன் வியாபாரி லுக்கில் பயமுறுத்தினார்.

ஆவி பயத்தை காட்டிட்டாங்கடா பரமா…!

Leave A Reply

Your email address will not be published.