பெண் உரிமைக்காக முழங்க இன்னொரு டைரக்டர் வந்தாச்சு!

1

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வெற்றி, தன் என்ஜினில் இன்னும் சில பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு ஓடும் போலதான் தெரிகிறது. சில தினங்களுக்கு முன் பிரஸ்சை மீட் பண்ணிய சவுந்தர்யா ரஜினி, “விஐபி2 வுக்கு அடுத்ததாக 3 ம் பாகம் வந்தால் கூட அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை” என்று கூறினார்.

பேச்சில் மட்டுமல்ல, துறுதுறு மேனரிசங்களிலும் அப்படியே அவரது அப்பா ரஜினியை உரித்து வைத்திருக்கிறார் சவுந்தர்யா. சற்றே கட்டை குரலில், “நெக்ஸ்ட்?” என்று கேள்வி கேட்டு பதில் சொல்லும் லாவகம்… மிரட்டல்!

“கோச்சடையான் வேற மாதிரியான படம். இது வேற மாதிரியான படம். இந்த கதை அப்படியே விஐபி முதல் பகுதியின் தொடர்ச்சியா இருக்கும். இதில் மிக பொருத்தமா வந்து சேர்ந்து கொண்டது காஜோலின் கேரக்டர். பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்தி தர்ற படம் மட்டுமில்ல. பெண்களின் உரிமையை பேசுற படமாகவும் விஐபி2 இருக்கும்” என்ற சவுந்தர்யாவுக்கு, அவரது அப்பா கண்டிப்பா பாராட்டுற மாதிரியும் இந்தப்படம் இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

‘‘ரஜினி சாரை வச்சு படம் பண்ற எண்ணம் இருக்கா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர முடியாதே? கேட்டால், “யாருக்குதான் அந்த ஆசை இருக்காது?” என்கிறார் சவுந்தர்யா!

ரஜினி நடித்த படத்திலேயே சவுந்தர்யாவுக்கு பிடித்தது ‘மன்னன்’தானாம்.

நல்லதா போச்சு. மனசார அவரை ‘மன்னன்’ ஆகத்தான் விடுங்களேன்… (குடும்பம்தான் அவர் அரசியலுக்கு வருவதை தடுக்குதுன்னு ஊர் பேசிக்குது)

1 Comment
  1. Prabhu says

    All the very BEST Ms. Soundarya

Leave A Reply

Your email address will not be published.