ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்குறீங்க! ஆனால் அவங்கதான் திட்றாங்க! ரஜினியால் புரிந்த உண்மை!

5

தொப்புள் கொடி உறவு என்று சொல்லி சொல்லியே அவரவர் கட்சிக் கொடிக்கு வர்ணம் அடித்துக் கொண்ட பலரும், ஈழத்தமிழன் என்ன நினைக்கிறான் என்பதை ஒருபோதும் யோசித்ததேயில்லை. இந்த உண்மையை புரிய வைத்த சம்பவம்தான் இது. யாருக்காக இத்தனை வருஷம் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்களோ, அவர்களே “கொஞ்சம் சும்மாயிருங்கய்யா” என்று சொன்னதை சற்று அவமானத்தோடுதான் கவனிக்க வேண்டியிருக்கிறது.

ஏப்ரல் 9 ந் தேதி யாழ்பாணத்தில் வவுனியா பகுதியில் 150 ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகளை வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. வீடுகளை கட்டிக் கொடுத்த லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜா, சாவிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி கையால் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரும் அதற்கு மனப்பூர்வமாக ஒப்புக் கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி போவது சரியல்ல என்று குரல் கொடுத்தார்கள் வைகோ, திருமா, வேல்முருகன், பா.ம.க ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்.

அப்புறம் என்ன? நமக்கெதுக்குடா வம்பு என்று தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார் ரஜினி. இதற்கப்புறம்தான் அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது. ரஜினி வருவார். பக்கத்தில் நின்று பார்க்கலாம். தொலைவில் நின்றாவது ரசிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்கு வந்ததே கோபம்.

எமது புனித மண்ணை காண துடிக்கும் கலைஞனை தடுக்க நீங்கள் யார்? என்றும், ஈழ மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தாதே… என்றும் மேற்படி தலைவர்களுக்கு எதிராக பேனர்களை தாங்கி ஊர்வலமே நடத்திவிட்டார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் திரண்டு நடத்திய இந்த ஊர்வலச் செய்தியை, உடனடியாக இணையத்தில் ஏற்றி உலகம் முழுக்க ஒலிக்கவும் செய்துவிட்டார்கள்.

இப்படிப்பட்ட சினிமா ரசிகர்களுக்காகதான் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கிறார்கள் நம்ம தலைவர்கள்.

எல்லா விஷயத்திலேயும் உண்மை வேறொன்றாகதான் இருக்கிறது.

5 Comments
 1. Rajii says

  Antha urvalaththukku kasu kuduththu aatkalai kooti vantha news theriyatho ungalukku.
  Avargal onnum kalaijargal illai.oru naal nadigargal.
  Thiruma ,,,etc etc and Rajini Lyca onnum nallavargal illai.

 2. Rajii says

  ரஜினியும் அதை செய்ய தானே இலங்கை செல்ல இருந்தார் ,
  நல்ல விசயத்தை யாரும் இனிமேல் கெடுக்காதீர் ,
  இங்கிருந்து கொண்டு என் தமிழர்கள் அங்கு கஷ்டப்படுகிறார்கள் நீலி கண்ணீர்
  யாரும் நடிக்காதீர், அங்கு போய் உண்மை நிலவரத்தை பார்த்து
  அந்த மக்களுக்கு உதவி செய்யுங்கள் .

  1. Rajii says

   ரஜினி. நல்லதை தனியாக சென்று செய்யட்டும். ஏன் லைக்கா?
   என்ன இவ்வளவு நாள் இல்லாத அக்கறை.

   1. Rajii says

    ரஜினி என்பவர் நடிகர் மட்டும் இல்லை….. தமிழக நலம் விரும்பியும் கூட…MLA , MP கூட இல்லாத பவர்….ரஜினிக்கு உண்டு.. எப்படி என்றால், அரசியல் சாயம் இல்லாத தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்..அதனால் இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை பற்றி சொன்னால், அதை பற்றி கண்டிப்பாக பரிசீலித்திருப்பார்….

 3. Eelzhavan says

  ஐயா, உண்மைக்கு புறம்பா செய்திகளை போடுவதில் உம்மை மீற இங்கு யாரும் இல்லை.
  தயவுசெய்து இதையும் பாருங்கள்.
  https://youtu.be/6d4ygT1TNdo

Leave A Reply

Your email address will not be published.