சித்தப்பா அப்பாவாகி இப்போ பெரியப்பா ஆகிவிட்டார்? எல்லாம் ஒரு வியாபாரந்தேன்…!
சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என்ற படம் இன்னொரு காக்கா முட்டையாக பெருமை தேடித் தரும் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்ட சமுத்திரக்கனி, இதற்கு இளையராஜா இசையமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று அங்கு போனாராம். வெறும் பின்னணி இசை மட்டும் போதும். படத்திற்கு பாடல்களே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த சமுத்திரக்கனியிடம், ராஜா ஓரிடத்தை சொல்லி “அந்த இடத்தில் மட்டும் ஒரு பாட்டு வச்சுப்போம்” என்று சொல்ல அப்ஜக்ஷன் ஏது? இப்போது ஒரே ஒரு பாடலுடன் ஊர் மணக்க வரப்போகிறது அப்பா.
காதைக் கொடுங்கள். ஒரு ரகசியம்.
இந்த படத்தை அறுபது லட்சத்திற்கும் குறைவான செலவில் எடுத்த சமுத்திரக்கனி, அதை இரண்டரை கோடிக்கு தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்திற்கு விற்க, அவர்கள் ஐந்து கோடிக்கு லைக்காவுக்கு விற்றுவிட்டார்களாம். ஒரு சின்னப்படம் வெற்றியால் மட்டுமே பெரியப் படம் ஆனதெல்லாம் அந்தக்காலம். இப்போது சேர்த்து சேர்த்து விற்பதால் மட்டுமே பெரியப்படம் ஆகிவிடுகிறது.
அப்பா… அப்பப்பா…