எல்லா மொழியிலும் ஒரே அப்பா! சாதித்த சமுத்திரக்கனி!

0

நல்லப்படங்கள் எப்போது வந்தாலும், குளிர குளிர கொண்டாடுகிற ரசிகர்கள் இருக்கும் வரை அப்பா மாதிரியான திரைப்படங்களுக்கு அம்பாரி சவாரிதான்! குழந்தைகளும் ரசித்து, அப்பாக்களும் ஆராதித்து, குடும்பங்களும் கொண்டாடுகிற படமாக மாறிவிட்டது அப்பா. ஆங்காங்கே இப்படத்தை பற்றி கேள்விப்படும் பள்ளி தலைமையாசிரியர்கள், தாங்களும் கண்டு களித்து பிள்ளைகளையும் தியேட்டருக்கு அனுப்பி வைக்கிற விசித்திரம், பல வருஷங்கள் கழித்து இப்போது நடந்து வருகிறது. தயாரிப்பாளருக்கு பண லாபத்தையும், பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் குண லாபத்தையும் பங்கு போட்ட வகையில் அப்பா அப்பாதான்!

தமிழ்நாடு மட்டும் அனுபவித்த இந்த அற்புத படத்தை, கேரளாவிலும் கொண்டாட வேண்டும் என்று நினைத்த ஒரு விநியோகஸ்தர் அப்பா படத்தை கேளராவிலும் வெளியிட்டிருக்கிறார். ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு பின் கேரளாவில் ஏக எதிர்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் படம் அப்பா.

அதுமட்டுமல்ல, சமுத்திரக்கனி கேரள ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவரும் கூட. சிக்கார், மாஸ்டர்ஸ், திருவம்படி தம்பன், த ஹிட் லிஸ்ட், டி கம்பெனி, தி ரிப்போர்ட்டர் உட்பட பல மலையாளப்படங்களில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. கேரள ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கண்ணியமான இமேஜ் உண்டு.

கேரளாவில் 25 தியேட்டர்களில் வெளியாகிறது அப்பா. மொழிகள் எதுவாக இருந்தால் என்ன? எல்லா மொழியிலும் அப்பா அப்பாதானே?

Leave A Reply

Your email address will not be published.